ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று - கருவூலம் மற்றும் கணக்குத்துறை - செய்தி வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2022

ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று - கருவூலம் மற்றும் கணக்குத்துறை - செய்தி வெளியீடு.

அரசாணை நிலை எண் .136 நிதி ( ஓய்வூதியம் ) த்துறை நாள் 20-05-2022 ன்படி தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கு இணையதள மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் 01-07-2022 முதல் துவங்கப்பட்டது.

ஓய்வூதியர்களின் இருப்பிடத்திற்கு சென்று இணையதள மின்னணு வாழ்நாள் சான்று வழங்கும் சேவையை இந்திய அஞ்சல் வங்கி தபால்துறை பணியாளர்கள் மூலமாக செய்து வருகிறது . 01-07-2022 அன்று மட்டும் 14.760 ஓய்வூதியர்களுக்கு இணையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யப்பட்டுள்ளது இதில் 1837 ஓய்வூதியதாரர்களுக்கு தபால் துறை ஊழியர்கள் ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கு சென்று இனையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து நேர்காணல் செய்யப்பட்டுள்ளது .. இ - சேவா , பொது சேவை மையங்களிலும் மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்து 2022 ம் ஆண்டிற்கான ஓய்வூதியதாரர்கள் ஆண்டு நேர்காணல் செய்யப்படுகிறது இணையதள மின்னணு வாழ்நாள் பதிவு செய்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் வாழ்நாள் சான்று பதிவு செய்த 3 நாட்களுக்குள் ஓய்வூதியதாரர்கள் கருவூலத்தில் அளித்துள்ள கைபேசி எண்ணிற்கு வாழ்நாள் சான்று ஏற்றுக்கொள்ளப்பட்டது தொடர்பான குறுஞ்செய்தி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எனவே ஓய்வூதியர்கள் மேற்கண்ட முறையில் இனையதள வாழ்நாள் சான்று பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி