அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஏன்? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 10, 2022

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது ஏன்? அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்

 

பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதால் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தகத் திருவிழாவிற்காக அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியை நேற்று ஆய்வு செய்த, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி:  எல்கேஜி, யுகேஜி வகுப்பில் 93ஆயிரம் மாணவர்கள் படித்தனர். தற்போது கூடுதலாக 52 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே எப்படி பாடம் எடுக்கப்பட்டதோ அதே முறையை பின்பற்ற கூறியுள்ளோம். தற்போது சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், அதற்கான பணிகளும் நடந்து வருகிறது. சிறப்பு ஆசிரியர்களை நியமித்த பிறகு முழுமையாக எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடைபெறும்.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 8ம் வகுப்பு வரை 5.34 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதில் தனியார் பள்ளிகளையும் சேர்ந்து 7 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்புகள் என சேர்த்தால் 9 லட்சம் மாணவர்கள் இந்தாண்டு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். அரசு பள்ளிகளில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம். இதன் காரணமாக அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளது. இந்தாண்டு நீட் தேர்வுக்கு 16 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக அரசு சார்பில் இலவச பயிற்சி அளித்து வருகிறோம். இந்தாண்டு முழுமையாக பள்ளிகள் நடைபெறுகிறது. எந்த பாடத்தையும் குறைக்க போவதாக இல்லை. இதற்காக ஒளிபரப்பப்படும் சிறார் சினிமா மூலம் மாணவர்களின் மனநிலையில் மாற்றம் வரும். போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக போலீசாருடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

6 comments:

 1. Ewlo students ku teachers..???????

  ReplyDelete
 2. மாணவர்கள் எண்ணிக்கை கூடினால் ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்படவேண்டும்.ஆனால் அதுமட்டும் செய்யமாட்டார்கள்.

  ReplyDelete
 3. இவர்தான் ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்கள் என்ற பெயரில் கட்சிக்காரர்களை நியமித்து பாடம் நடத்துகிறார் போல

  ReplyDelete
 4. என்ன ஆலோசனை நடத்தினாலும் அதிமுக ஆட்சியில் செய்த பாவங்களை அப்படியே செய்து வருகிறீர்கள். தகுதித் தேர்வு எழுதி மறுபடியும் தேர்வு. இன்னமும் எத்தனை தேர்வு தான் வைப்பீர்கள். தகுதி இருந்தும் வயது அதிகமாக உள்ளவர்கள் குடும்பம் குழந்தைகளை கவனிப்பார்களா? தேர்வு எழுதி எழுதி வயது முதிர்வு ஆவதா? விடியல் கிடைக்கும் என்று ஓட்டு பலரிடம் கெஞ்சி போடவைத்தவர்களின் தலைகளில் மண் அள்ளி போடும் நிலையாக உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் தத்தளிக்கும் மோசமான நிலையில் உள்ளது. கல்வித்துறை. இனியாவது விடியல் கிடைக்குமா????

  ReplyDelete
 5. ஓய்வு வயதை இன்னும் உயர்த்தி இளைஞர்கள் விரக்தியின் விளிம்பிற்கு செல்ல வைக்கலாம்.

  ReplyDelete
 6. This is Not just a Testimony, It's a Review for the Great Service from Standard Finance Corporation. Mrs Roselia Jaquez the Loan Dispatch Lady, was the best when it comes to Explaining the Loan Process. Imagine Getting a loan of $250,000.00 With 48hours. You can check them out and apply online www.standardfinancecorporation.com, Email: standardbankfinancialgroup@accountant.com

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி