TNPSC - Group 1 Notification - 2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 21, 2022

TNPSC - Group 1 Notification - 2022

தமிழ்நாடு குடிமைப் பணி, தமிழ்நாடு காவல் பணி, தமிழ்நாடு வணிகவரிப் பணி,  தமிழ்நாடு கூட்டுறவுப் பணி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சிப் பணி, தமிழ்நாடு பொதுப் பணித்துறைகளில் நிரப்பப்பட உள்ள துணை ஆட்சியர், துணைக் காவலர், உதவி ஆணையர், வணிகவரித் துறை, துணைப் பதிவாளர், உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 91 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து ஆகஸ்ட் 22 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண். 620    அறிக்கை எண். 16/2022 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: துணை ஆட்சியர் - 18
பணி: துணைக் காவல் கண்காணிப்பாளர் (வகை-1) - 26
பணி: உதவி ஆணையர், வணிகவரித் துறை - 25
பணி: கூட்டுறவுச் சங்கங்களின் துணைப் பதிவாளர் - 13
பணி: உதவி இயக்குநர், ஊரக வளர்ச்சித் துறை - 07
பணி: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தமிழ்நாடு பொதுப்பணி - 03

கல்வித் தகுதி: வணிகம் மற்றும் சட்டம் இரண்டிலும் பட்டம் பெற்றவர், வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, வணிகம் அல்லது சட்டத் துறையில் பட்டம் மற்றும் வரி விதிப்பு சட்டங்களில் டிப்ளமோ, பொருளாதாரம், கல்வி, சமூகவியல், புள்ளியியல் அல்லது உளவியலில் பட்டம், சமூக அறிவியல், சமூகவியலில் முதுகலை பட்டம் அல்லது டிப்ளமோ டிப்ளமோ படித்தவர்கள், தொழில்துறை அல்லது தனிநபர் மேலாண்மை அல்லது தொழிலாளர் நலனில் அனுபவம், கிராமப்புற சேவையில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | பொதுத்துறை நிறுவனத்தில் இன்ஜினியர் டிரெய்னி வேலை... பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி 21 வயது நிறைவடைந்தவராகவும் 39 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

சம்பளம்: மாதம் ரூ. ரூ.56100 - 2,05,700

விண்ணப்பக் கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதனிலைத் தேர்வு ரூ.100, முதன்மை எழுத்துத் தேர்வு ரூ.200 செலுத்த வேண்டும். விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.  கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு அடங்கிய பதவிகளுக்கு தெரிவு மூன்று நிலைகளைக் கொண்டது. எழுத்துத் தேர்வு, முதல்நிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்காணல், வாய்மொழித் தேர்வு மற்றும் கலந்தாய்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in / www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/GROUP-I_Notfication_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் நாள்: 31.10.2022

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 22.08.2022

Applications are invited from eligible candidates only through online mode upto 22.08.2022 for direct recruitment to the vacancies in the posts included in Combined Civil Services Examination - I ( Group - I Services )

 TNPSC - Group 1 Notification - Download here....

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி