பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ராணிப்பேட்டையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி:
தனியார் பள்ளிகளில் கூடுதல் மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக அதிகப்படியான அழுத்தத்தை மாணவர்கள் மீது செலுத்துவதை கைவிட வேண்டும். கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தை தொடர்ந்து அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல, தனியார் பள்ளிகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. இனிவரும் காலங்களில் தனியார் பள்ளிகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை பாதுகாக்க தனி சட்டம் கொண்டு வருவது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
அப்ப மாணவர்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியே
ReplyDeleteமாணவர்கள் பாதுகாப்பு (தனியார் பள்ளிகளில்) பற்றி முதலில் யோசிக்க வேண்டும்.
ReplyDelete2014 ல இருந்து பதவி உயர்வு மட்டுமே வழங்கி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை கடந்த ஆட்சியில் செய்து இதுவரை படித்த இளைஞர்கள் வேலை கிடைக்கும் நிலையை கெடுத்து விட்டார்கள். இந்த ஆட்சியிலும் அதே நிலை தொடர்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது 1864 பணியிடங்களை மட்டுமே நிரப்புகிறார்களாம் அதுவும் மறு நியமனத் தேர்வு வைத்து. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? 10 ஆண்டு நியமனம் வழங்காமல் தற்போது தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை எழுத சொல்வது? இதேபோல் பணியில் இருப்பவர்கள் 60 வயது வரை நீட்டிப்பு ஒருபுறம். படித்தவர்கள் எங்கே சென்று பிச்சை எடுப்பது?
ReplyDeleteஅதுதான் விடியல் எனப்படும் 😄😄😄
Deleteமொதல்ல செய்யுங்கடா வயித்தெரிச்சல கெளப்பதிங்க
ReplyDeleteWe want ONLY ONE BJP ANNAMALAI SIR IS CM OF TM
ReplyDeleteVaralam bro... Avarum change agiduvaar......
Delete