பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் ஒலிம்பியாட் தேர்வு: ஆக.22 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 9, 2022

பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் ஒலிம்பியாட் தேர்வு: ஆக.22 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து பாடத்திட்ட பள்ளிகளிலும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்கு நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாட் தேர்வுக்கு ஆக. 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ் மரபு பற்றிய அறிவும் இலக்கிய ஆற்றலும் மிக்க இளைய சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நடத்தப்படும் தமிழ் ஒலிம்பியாட் தேர்வு மிக முக்கியமானது.


தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இந்தகல்வியாண்டு முதல் தமிழ் இலக்கிய திறனறி தேர்வு நடத்தப்படஉள்ளது. இதில் தேர்வாகும்மாணவர்களுக்கு மாதம் ரூ.1,500வீதம் 2 ஆண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


10-ம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.இந்த கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட அனைத்து வகை பள்ளிகளில்11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ண ப்பிக்க இயலும். விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9-ம் தேதிவரை பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்த விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ.50 சேர்த்து தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.


விண்ணப்பங்களை செப்.9-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி