அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 21, 2022

அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை - அன்பில் மகேஷ்


தமிழகத்தில் அடுத்த மாதத்துக்குள் மூவாயிரம் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் நிரப்பப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.


சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் அலுவல் கூட்டம் இன்று நடைபெற்றது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை தாங்கினார்.


பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், " இதுவொரு வழக்கமான கூட்டம் தான். மாவட்டங்கள் வாரியாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிகளை சீரமைக்கும் பணிகள் குறித்தும், மரத்தடியில் நடைபெறும் வகுப்பறைகளுக்கு கட்டடங்கள் கட்டுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை துரிதப்படுத்த உள்ளதாக தெரிவித்தார். அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும்,நிதித் துறை அமைச்சரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


ஆசிரியர் நியமனங்கள் குறித்து பேசிய அவர், " LKG மற்றும் UKG வகுப்புகளுக்குத் தேவைப்படும் சிறப்பாசிரியர்களை நியமனம் செய்வது குறித்தும், தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிவித்தார்.


கல்வித் தொலைக்காட்சி சர்ச்சைக் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "சிஇஓ-வாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன்பூபதியின் மீது குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பணியான தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தேர்ந்தெடுக்கபட்டவரின் பின்புலன் முறையாக ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்வர் அலுவகத்திடம் ஒப்புதல் பெற்று அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார்.


அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பள்ளி மாணவர்களுக்கு நடப்பாண்டு லேப்டாப் வழங்குவது குறித்து தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் நிதித்துறையிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

7 comments:

 1. கல்வி துறைக்கு மட்டும் எங்கிருந்தாவது ஒரு கிறுக்கன் வந்து மாட்டிக்கிறான் !! உங்களுக்கும் செங்கோட்டையனுக்கும் என்ன வித்தியாசம்? பொய்யா புழுகிட்டு திரியாதீங்க..

  ReplyDelete
 2. அட லூஸ் பயல கிருக்கனாடா

  ReplyDelete
 3. Bed mudichittu tet pass pannittu niraiyaper anganwadiyila work panrome.lkg ukg postinga engalukku kodukkalamla sir.

  ReplyDelete
 4. Bed mudichittu tet passpannittu anganwadiyila niraiya paer work panrome.lkg ukg postinga engalukku kodukkalam la sir.

  ReplyDelete
 5. இனி மேல் யாரும் பி.எட் படிக்காதீங்க ஆசிரியர் பணி கிடைக்காது என்று சொல்லீட்டுப் போங்க சார் இனி வருகின்ற இளைஞர் சமுதாயமாவது எங்களைப் போல ஏமாறாமல் இருப்பாங்க

  ReplyDelete
 6. செங்கொட்ட part 2 இந்த மங்குனி மாங்கொட்ட......

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி