க்யூட் நுழைவுத் தேர்வு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 5, 2022

க்யூட் நுழைவுத் தேர்வு 12ம் தேதிக்கு ஒத்திவைப்பு

நாடு முழுதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகளில் சேர, 'க்யூட்' எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.நடப்பு கல்வியாண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான க்யூட் நுழைவுத் தேர்வு, ஜூலை 15ல் துவங்கி இம்மாதம் 20 வரை நடக்கிறது. 


இந்த தேர்வு, காலை - மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுகின்றன. இந்நிலையில், நேற்று காலை நடக்க இருந்த தேர்வின் போது, 17 மாநிலங்களில் உள்ள ஒரு சில மையங்களில் நிர்வாக மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, அந்த மையங்களில் மட்டும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.அதேபோல, நேற்று மாலை நடக்க இருந்த தேர்வும், முழுமையாக ரத்து செய்யப்பட்டது. 


  இந்த தேர்வுகள், வரும் 12 - 14 ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 'தற்போது வழங்கப்பட்டுள்ள அனுமதி சீட்டை வைத்தே அன்றைய தேதிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம்' என, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.இந்த தேதிகளில் தேர்வு எழுதுவதில் சிரமம் இருக்கும் மாணவர்கள், வேறு தேதி கேட்டு datechange@nta.ac.in என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி