மாநில திட்ட அலுவலர் பணி: விண்ணப்பிக்க 26ம்தேதி கடைசி நாள் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 11, 2022

மாநில திட்ட அலுவலர் பணி: விண்ணப்பிக்க 26ம்தேதி கடைசி நாள்

 மாநில தத்து வள ஆதார மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர்  பணி நிரப்பப்பட உள்ளது. வரும் 26ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும். இதுகுறித்து, சமூக பாதுகாப்பு துறை இயக்குனர் வெளியிட்ட அறிக்கை: சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்படும் மாநில தத்து வள ஆதார மையத்தில் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் திட்ட அலுவலர்  பணியிடம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவற்றை  http://www.tn.gov.in/job_opportunity என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.


இந்த பதவிகளுக்கான  தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்ப படிவங்கள் வரும்  26ம் தேதி  மாலை 5.30 மணிக்குள்,  இயக்குனர், மாநில தத்து வள ஆதார மையம், சமூக பாதுகாப்புத் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, கெல்லீஸ், சென்னை-10 என்ற முகவரிக்கு வந்து சேரும் வகையில் அனுப்ப வேண்டும்.  முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களும் தகவலின்றி நிராகரிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி