பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 22 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 11, 2022

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு: 22 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின்கீழ் விண்ணப்பம்

 

தமிழகத்தில் பொறியியல் இளநிலை படிப்புகளில் உள்ள 1.5 லட்சத்துக்கும் மேலான இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 முதல் ஜூலை 27-ம் தேதி வரை நடைபெற்றது.


மொத்தம் 2.11 லட்சம் மாணவர்கள் பதிவுசெய்த நிலையில், 1.58 லட்சம் பேர் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களை சமர்ப்பித்தனர்.


இதற்கிடையே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க அரசுப் பள்ளி மாணவர்கள் 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக உயர்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:


நடப்பு கல்வியாண்டு பொறியியல் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் 11 ஆயிரத்துக்கும் மேலான இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. இதில் சேர்க்கை பெற சுமார் 22 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.இந்த மாணவர்களுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை இடங்கள் ஒதுக்கப்படும். எனினும், 7.5 சதவீத ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொது கலந்தாய்வில் பங்கேற்று பிடித்தமான கல்லூரிகளில் சேரலாம்.


எனவே, விண்ணப்பித்த அனைவருக்கும் சேர்க்கை இடங்கள் கிடைக்கும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் தமிழக அரசே செலுத்தும். இவ்வாறு அவர்கள் கூறினர். கடந்தாண்டு 7,876 அரசுப் பள்ளி மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி