தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக பயிற்சி - 9.5 கோடி ஒதுக்கீடு : அன்பில் மகேஷ் கருத்து - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 25, 2022

தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக பயிற்சி - 9.5 கோடி ஒதுக்கீடு : அன்பில் மகேஷ் கருத்து

ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில், பள்ளி கல்வித்துறை சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் தலைமைப் பண்பு மேம்பாட்டுக்காக மாநில அளவிலான 6 நாள் உண்டு, உறைவிட கருத்தாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.


இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பேசினார்.


பின்னர் அவர் அளித்த பேட்டி:


நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில்தான் தலைமை ஆசிரியர்களுக்கு இதுபோன்று உண்டு, உறைவிடப் பயிற்சி அளிக்கப்படுகிறது.


இத்திட்டத்துக்காக ஒன்பதரை கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பள்ளிக் கல்வித் துறை மேம்பாட்டுக்காக பல நல்ல மாற்றங்களை கொண்டு வரும்போது, மாணவர்களின் நலனுக்காக சில இடங்களில் பின்வாங்குவதில் தவறில்லை. போதை இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற தமிழக முதல்வரின் கனவு விரைவில் நனவாகும்.


அதற்காக காவல்துறை முழு ஈடுபாட்டுடன் களமிறங்கி செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1 comment:

  1. இந்த பயிற்சி வளாகத்தில் கல்லூரி மாணவர்கள் குடிக்கும் குடிநீர் மட்டுமே தரப்படுகிறது அந்த மாணவர்களின் ஹாஸ்டல் வளாகத்தில் அளிக்கப்படும் உணவே தரப்படுவதாகவும் தலைமை ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இந்த பயிற்சிக்காக 9 .5 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பதாக கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்த பயிற்சிக்கு இவ்வளவு பணம் செலவாகுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.? இந்த பயிற்சிக்கு பெரும்பாலான தலைமையாசிரியர்கள் தங்களுடைய சொந்த வாகனத்திலே ராஜபாளையத்தை அடைந்துள்ளனர் அப்படி இருக்கும் பொழுது இவர்களுக்கு இவ்வளவு பணம் எவ்வாறு செலவாகும் என்பது கேள்விக்குறி? இது போன்ற வீண் செலவுகளை செய்து விட்டு கல்வித் துறையில் ஆசிரியர்களை குறை கூறும் இவர்களை என்ன கூறுவது வருடத்திற்கு 35 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது ஆனால் அவ்வளவு பணம் என்ன ஆகிறது என்பதை ஒன்றும் புரியவில்லை ஏனென்றால் அரசு பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகளில் போதுமான அடிப்படை வசதி கூட இல்லை இந்த வசதிகளை மேம்படுத்த டோனர்களை நம்பியே பள்ளிகள் இருக்கின்றன. ஏன் வீணாக செலவு செய்யப்படுகிறது என்று ஒன்றும் புரியவில்லை..?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி