தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரக தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 27, 2022

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரக தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு

 

தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது.


2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இதன் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.


இதில் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி ஆகியோர் போட்டியிட்டனர். இதில் பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் மணி வெற்றி பெற்றார்.


தற்போது 5 ஆண்டு பதவிக் காலம் முடியும் நிலையில், புதிய நிர்வாகிகள் நியமனத் தேர்தல் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.


இத்தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் அவகாசம் சமீபத்தில் முடிவடைந்தது. தலைவர் பதவிக்குபள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தவிர வேறு யாரும் விண்ணப்பிக்கவில்லை.


இதையடுத்து, தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ்,போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சாரணர் இயக்குநரக மாநில முதன்மை ஆணையராக பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமாரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


பாடநூல் கழக செயலாளர் ச.கண்ணப்பன் உட்பட 12 பேர் துணைத் தலைவர்களாகவும் தேர்வாகியுள்ளனர். அவர்களில் 6 பேர்பெண்கள். இதற்கு முன்பு நெடுஞ்செழியன்,க.அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் சாரணர் இயக்குநரக தலைவர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. அப்போ, அண்ணன் H ராஜா??

    ReplyDelete
  2. அரசு துறைகளில் மிக முக்கியமானது,
    பள்ளி கல்வி துறை,
    இந்த துறைக்குதான்
    அதிக அளவில் நிதி ஒதுக்கீடு
    செய்ய படுகிறது,
    இப்படி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறைக்கு,
    அனுபவம், சமயோசிதம் ஏதும்
    இல்லாத,
    தனது மகன்
    பெயரில் உள்ள
    ரசிகர் மன்றத்தின்
    தலைவர்,
    என்பதற்காக,
    திரு மங்குனி அமைச்சர் என்று
    பெயர் எடுத்தது தான்
    மிச்சம்,
    பள்ளி கல்வி துறை இல்,
    பொறுப்பேற்ற நாள் முதல்,
    ஒரு, mm அளவில் கூட முன்னேற்றம் இல்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி