டிஆர்பி-யில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 20, 2022

டிஆர்பி-யில் தமிழ் தகுதித்தேர்வு அறிமுகம்!

 

விரிவுரையாளர் தேர்வில் முதன்முறையாக தமிழை தகுதித்தேர்வாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. 
இதன்படி விரிவுரையாளர் பணிக்கு விண்ணப்பிப்போர் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறவுள்ள நிலையில் 20 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். 

அதேசமயம் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற நடைமுறையில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

பிற மாநிலத்தவர் தமிழக தேர்வுகளில் நுழைவதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
டிஎன்பிஎஸ்சி-யில் ஏற்கெனவே அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தகுதித்தேர்விலும் அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு exam கிடையாது...பின் தமிழ் கட்டாய தேர்வு எப்படி நடத்துவார்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி