TNPSC - தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 8, 2022

TNPSC - தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தொகுதியின் கீழ் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதன்படி, நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.


இதேபோல், பொதுப்பணித்துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, துறை உயர் அலுவலர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் சிறந்து விளங்கும் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2021-22ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருத்தாளர்களுக்கு கேடயங்களையும், பாராட்டு சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் எம்.ஆர்.காந்தி,  துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி