மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: UPSC அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022 - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Aug 25, 2022

மத்திய அரசில் பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு: UPSC அறிவிப்பு - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022

 

மத்திய அரசின் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 37 காலியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


மொத்த காலியிடங்கள்: 37

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:


பணி: இன்பர்மேசன் சர்வீஸ் - 22

பணி: பிளையிங் டிரைனிங் -0 4

பணி: சயின்டிபிக் ஆபிசர் - 03

பணி: அசிஸ்டென்ட் இயக்குநர் - 02

பணி: எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் - 02

பணி: போட்டோகிராபிக் ஆபிசர் - 02


தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


வயது வரம்பு: 1.9.2022 தேதியின்படி கணக்கிடப்படும். 


தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை : https://upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்: ரூ. 25. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்கள் பிரிவினருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.09.2022


மேலும் விவரங்கள் அறிய https://upsconline.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி