14.4% தகுதி மதிப்பெண் போதும் - தகுதியானதா நீட்தேர்வு? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 11, 2022

14.4% தகுதி மதிப்பெண் போதும் - தகுதியானதா நீட்தேர்வு?


நீட் தேர்வு மொத்தம் 720 
மதிப்பெண்களுக்கு நடைபெறுகின்றது. 

அதாவது .

வேதியியல் 180
இயற்பியல்  180
உயிரியல்     360 

இதில் குறைந்தபட்சமாக அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்க .. 

540 க்கும் அதிகமான மதிப்பெண்கள் தேவை,... 

ஆனால் இந்த பெண் மருத்துவக் கல்லூரியில் படிக்க ...

104 மதிப்பெண்களே போதுமானது என்கிறார். .. 

அதாவது நீங்கள் FC/OBC/SC/ST எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும்...

நீட் தேர்வில் 104 மதிப்பெண்கள் எடுத்தாலே போதுமானது,.. 

எதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணமிருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ...

இந்த மதிப்பெண்  வருடத்திற்கு வருடம் மாறுபடலாம். 

முன்பெல்லாம் தமிழகத்தின் மாநிலப் பாடதிட்டத்தில் ...

1200 மதிப்பெண்களுக்கு 600 மதிப்பெண்கள் அதாவது 50% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே MBBS/BDS படிப்பிற்கு விண்ணப்பிக்கவே முடியும். ...

ஆனால் நீட் தேர்வில் அவ்வாறு இல்லாமல் ...

50th Percentile  இருந்தால் போதும் நீங்கள் வெற்றி பெற்றதாக அர்த்தம். 

பெர்சண்டைல் என்பது என்னவென்றால் ஒரு லட்சம் பேர் தேர்வு எழுதியவர்கள் என்றால் 

அதில் பாதியான  50,000மாவது  நபர் என்ன மதிப்பெண் எடுத்திருக்கிறாரோ ...

அந்த மதிப்பெண்ணே 50th பெர்சண்டைல் ஆகும்.

இதன்படி பார்த்தால் 720க்கு 104 மதிப்பெண்கள் என்பது 100க்கு 14.4% ஆகும். ...

அதாவது பள்ளி கல்வியில் கூட 100 க்கு 35% மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். 

ஆனால் நீட் தேர்வில் 14.4% பெற்றாலே போதுமானது நீங்கள் தேர்ச்சி பெற்றதாக எடுத்துக் கொண்டு... 

ஏதாவது ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் பணமிருந்தால் சேர்ந்து கொள்ளலாம். ...

இந்த 14.4%யைதான் மத்திய அரசு நீட்டிற்கான தகுதியாக கூறுகின்றது. 

இப்படி சேரும் மாணவர் எவ்வாறு தகுதிவாய்ந்த  மருத்துவராக உருவாக்க முடியும் ...

இந்த பெண் கூறுவது போல் 93 மதிப்பெண்கள் பாஸ் மார்க் என்றால் ...

அது 100 க்கு 12.9% ஆகும். 

இது எப்படி மருத்துவம் படிக்க தகுதி மதிப்பெண்களாக இருக்க முடியும்?? ..

அப்படியென்றால் ஒன்றிய அரசு யாரை ஏமாற்றப் பார்க்கின்றது?

தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுதந்தாலும் ...

அதற்கு குறைந்தது 1 கோடி செலவு ஆகும்.

இதுபோன்ற எத்தனையோ கிராமபுற மாணவர்கள் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். 

மேலும் இந்த பெண் கூறுவது போல் நீட் தேர்வு எளிது என்றால்... 

720 மதிப்பெண்களுக்கு 104 மதிப்பெண்களை பெற்றுவிட்டு ...

அதாவது 14.4% எடுத்துவிட்டு எப்படி தேர்வு எளிது என்று கூறுகின்றார். 

பொதுவாக 100க்கு 95% எடுத்த ஒருவர் நீட்தேர்வு எளிது என்று கூறினால்... அதில் ஒரு நேர்மை உள்ளது. 

100க்கு 14 மதிப்பெண் பெற்றவர் நீட்தேர்வு எளிது என்று கூறுகின்றார் என்றால் இதை எப்படி ஏற்றுக் கொள்வது??

யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?? 

இதிலிருந்தே தெரிகின்றது

#நீட்தேர்வின்_உண்மை_தன்மை !!

1 comment:

  1. 50 சதவீத மதிப்பெண் பெறுபவர் தகுதியானவராக இருக்க மாட்டார். 13 சதவீதம் பெறுபவர் தான் தகுதியானவரா இருப்பார். சரி என்று தானே மக்கள் தொடர்ந்து வாக்களிக்கின்றனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி