பள்ளிகளுக்கு விடுமுறை: பன்னீர் கோரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Sep 19, 2022

பள்ளிகளுக்கு விடுமுறை: பன்னீர் கோரிக்கை

 

ப்ளூ காய்ச்சல் பாதிப்பில் இருந்து மாணவ - மாணவியரை காப்பாற்ற, சிறிது காலம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்து உள்ளார்.


அவரது அறிக்கை:தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் சற்று அதிகரிக்க துவங்கியுள்ள நிலையில், 'ப்ளூ' வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.இந்தக் காய்ச்சலில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதால், மருத்துவ மனைகள் நிரம்பிவழிகின்றன.டாக்டர்களின் ஆலோசனைப்படி, புதுச்சேரியில் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ - மாணவியருக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.


இங்கு காய்ச்சல் இருந்தால், பள்ளிகளுக்கு வர வேண்டாம் என, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டாலும், தேர்வை காரணம் காட்டி மாணவர்களை வரச் சொல்வதாக, பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காய்ச்சல் கட்டுக்குள் கொண்டு வரப்படும் வரை, சிறிது காலத்திற்கு பள்ளிகளுக்கு, குறிப்பாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து, தேர்வை தள்ளிவைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. இரண்டு ஆண்டுகளாக மாணவர்கள் சீர் கெட்டு சமூகவிரோதிகளாக மாறியது போதாதா.. தயவுசெய்து பள்ளி விடுமுறை என்பது தேவையில்லாத ஒன்று. மீண்டும் இது மாணவர்களுடைய கல்வி ஒழுக்கம் போன்ற விஷயங்களை கேள்விக்குறியாக்கும்..

    ReplyDelete
  2. My son also heavy fever, cold .cough.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி