தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் படிப்புகள் பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் படிப்புகளுக்கு இணையானவை - யுஜிசி
2035ல் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது
2014 பாடநெறிகள் அங்கீகரித்தல் தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி (ODL) மற்றும் இணைய வழிப்படிப்புகள் பொதுவான உள்வகுப்புத் திட்டங்களுக்கு சமமாக கருத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
2035ல் உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் 50 சதவீதமாக உயர்த்துவும், உயர் கல்வி நிறுவனங்களில் 3.5 கோடி புதிய இடங்களை சேர்க்கவும் புதிய கல்வி கொள்கை வலியுறுத்துகிறது.
இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு உகந்த கற்றல் சூழல்களை உருவாக்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாடத்திட்டம், கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல் (Multiple Entry and Exit), விருப்பதெரிவு அடிப்படையிலான தரமதிப்பீடு அமைப்பு முறை (Choice based Credit System) போன்ற முன்னெடுப்புகளும் இதில் அடங்கும்.
உயர்கல்வியின் ஒட்டுமொத்த தரத்தினை அதிகரிக்கும் மிக முக்கிய கருவியாக திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி (Open and Distance Learning), இணைய வழிக் கல்வி (Online learning) செயல்படும் என்று புதிய தேசியக் கல்விக் கொள்கை அடையாளம் கண்டுள்ளது. எனவே, தொலைதூரக் கல்வி, இணைய வழிக் கல்வி வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள், உயர்தர உள்வகுப்பு நிகழ்ச்சித் திட்டங்களுக்கு சமமாக இருப்பதை நோக்கமாக கொள்ள வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், இந்த பரிந்துரையை செயல்படுத்தும் விதமாக, பல்கலைக்கழக மானியக் குழு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், " 2014 பாடநெறிகள் அங்கீகரித்தல் (UGC Notification on Specification of Degree,2014) தொடர்பான பல்கலைக்கழக மானியக் குழுவின் நெறிமுறைக்கு உட்பட்டு வழங்கப்படும் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி (ODL) மற்றும் இணைய வழிப்படிப்புகள் பொதுவான உள்வகுப்புத் திட்டங்களுக்கு சமமாக கருத்தப்படும் என்றும், முதுநிலை படிப்புகளை பொறுத்த வரையைல் மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட முதுநிலை படிப்புகள் சமமாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி