Breaking : அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2022

Breaking : அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 

காலாண்டுத் தேர்வு முடிவுற்று அளிக்கப்படவேண்டிய விடுமுறை குறித்து கீழ்கண்டவாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலர் , மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்படுகிறது . காலாண்டுத் தேர்வு முடிந்தவுடன் 01.10.2022 முதல் 05.10.2022 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது . 

30.09.2022 அன்று எண்ணும் எழுத்தும் முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால் , அதற்கு பதிலாக ஈடுசெய்யும் விடுப்பு அளிக்குமாறு தொடந்து ஆசிரியர் சங்கங்களும் , ஆசிரியர்களும் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் 06/10/2022 , 07/10/2022 மற்றும் 08/10/2022 ஆகிய மூன்று நாட்களும் ஈடுசெய்யும் விடுப்பாக கருதப்படும் . ( மீதமுள்ள 2 நாட்கள் பின்பு ஈடுசெய்யப்படும் . ) பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்புகளுக்கு அக்டோபர் மாதம் 10 ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும்.


 தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்புகளை கையாளும் ஆசிரியர்களுக்கு அக்டோபர் 10 , 11 , 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்ச்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் ( ந.எண் .2411 / # 2 / 2021 நாள் .26.09.2022 ) தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால் , 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் அக்டோபர் 13 ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவுறுத்தப்படுகின்றது.

1 comment:

  1. 😡😡 *இளிச்சவாயனாக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்*

    எப்படியும் பல்வேறு குழுக்களில் இது பகிரப்பட்டு உங்களிடம் வந்தடையும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறோம்:

    உங்களிடம் கேட்பதற்கு நிறைய இருந்தாலும் தற்போது வெறும் 5 கேள்விகள் மட்டுமே உள்ளன.

    1. கோடை விடுமுறையில் பயிற்சிக்கு சென்றவர்கள் யார்? இடைநிலை ஆசிரியர்களா? பட்டதாரி ஆசிரியர்களா? நடுநிலை & தொடக்கநிலை தலைமையாசிரியர்களா? உங்கள் பதில் "இடைநிலை ஆசிரியர்களில் 1 முதல் 3 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் மட்டும்தான்" என்பதாக இருக்குமேயானால் அவர்களுக்கு மட்டும் தானே ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும்???

    2. பட்டதாரி ஆசிரியர்களுக்கோ, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கோ 9ஆம் தேதி வரை விடுமுறை விடக்கூடாது என்று நாங்கள் சொல்வதாக நீங்கள் வழக்கம்போல் திரிக்கக் கூடாது.. நாங்கள் கேட்பது பிறரின் உரிமையைப் பறிப்பதற்காக அல்ல ...எங்கள் உரிமையை கேட்பதற்காக... அவர்களுக்கு 9ஆம் தேதி வரை விடுமுறை விடுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.. ஆனால் எங்களுக்கு அதேபோல் 9-ஆம் தேதி வரை விடப்படும் விடுமுறைக்கு மட்டும் ஏன் ஈடுசெய்விடுப்பு என்ற பெயரை கொடுக்கிறீர்கள்??? எங்களுக்கு அது ஈடுசெய் விடுப்பு என்றால் அவர்களுக்கு அந்த நாட்களில் (06.10.2022 முதல் 08.10.22) விடப்படும் விடுப்பிற்கு என்ன பெயர்??

    3. விடுமுறை நாளில் நாங்கள் பயிற்சி சென்றதால் எங்களுக்கு ஈடுசெய்விடுப்பு என்றால்,விடுமுறை நாளில் விடுமுறையிலேயே இருந்த பிறருக்கு எப்படி ஈடுசெய் விடுப்பு பொருந்தும்???

    4. மீண்டும் சொல்கிறோம் "அவர்களுக்கு 6ஆம் தேதி பள்ளி திறங்கள்" என்று நாங்கள் சொல்லவில்லை... 9ஆம் தேதியே திறக்கட்டும்... உங்கள் செயல்முறையிலுள்ள அந்த ஈடுசெய் விடுப்பு என்பதை மட்டும் எடுத்துவிடுங்கள்.. (06.10.22 முதல் 09.10.22 வரை உள்ள மூன்று நாட்களைத் தவிர்த்து) வேறு ஏதேனும் மூன்று நாட்களுக்கு ஈடுசெய்விடுப்பு அளித்தால் இதற்கு உண்மையான தீர்வாக இருக்கும்.. இதை செய்வீர்களா??

    5. அது ஏன் சார் இடைநிலை ஆசிரியர்களை மட்டும் இரண்டாம் தர குடிமக்களாக நடத்துகிறீர்கள்?? உங்கள் அளவிற்கு அறிவோ, திறமையோ இல்லாத எங்களுக்கே இந்த கடிதத்தை படித்தவுடன் இவ்வளவு லாஜிக் குறைவு தெரிகிறது என்றால், உங்களுக்குத் தெரியாமல் இருப்பதற்கு வாய்ப்பு இல்லை ... இருந்தும் அந்தக் கடிதத்தை வெளியிடுகிறீர்கள் என்றால் இடைநிலை ஆசிரியர்கள் தானே என்ற இளக்காரம் தவிர வேறென்ன இருக்க முடியும்???


    ஊதியத்திலும் பாதி ஊதியம்...

    பயிற்சியிலும் பலிகடா...

    இப்போது விடுமுறையிலும் இளிச்சவாயன்...

    நன்றி

    இவற்றிக்கு காலம் விரைவில் பதில் சொல்லும்...

    இவண்,

    எல்லாவற்றிற்கும் இளிச்சாவாயனாகும் இடைநிலை ஆசிரியன்...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி