அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 10 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 1,311 தொகுப்பூதிய விரிவுரையாளர்கள் திடீரென நீக்கப்பட்டு உள்ளனர்.
மாநிலம் முழுதும் செயல்படும், 52 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில், பகுதி நேர விரிவுரையாளர்கள் பதவியில், எம்.இ., மற்றும் எம்.எஸ்சி., முடித்த பட்டதாரிகள், 10 ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களாக நியமிக்கப்பட்டனர். இந்த வகையில், 2,500 பேர் பகுதி நேர விரிவுரையாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இவர்களில் முதுநிலை படிப்புடன் ஆராய்ச்சி படிப்பு, பி.எட்., போன்ற கூடுதல் கல்வித் தகுதி உடைய 1,311 பேர் தேர்வு செய்யப்பட்டு, பகுதி நேர பணியில் இருந்து, முழு நேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த 2019 நவம்பரில், அ.தி.மு.க., ஆட்சியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர்களுக்கு மாதம், 15 ஆயிரம் ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது.
'டிஸ்மிஸ்'
இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் காலியாக இருந்த நிரந்தர பணியிடங்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில் போட்டி தேர்வு நடத்தி, 1,024 பேருக்கு கடந்த வாரம் பணி நியமனம் வழங்கப்பட்டது.இதைத் தொடர்ந்து, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த, 1,311 பேர் கூண்டோடு நீக்கப்பட்டு உள்ளனர்.
இது குறித்து, அரசு பாலிடெக்னிக் முதல்வர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குனரக ஆணையர் லட்சுமிபிரியா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'பகுதி நேர மற்றும் தொகுப்பூதிய விரிவுரையாளருக்கு இனி பணி வழங்க வேண்டாம்.'புதிதாக ஆட்கள் தேவைப்பட்டால், யாரையும் நியமிக்கக் கூடாது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்துக்கு கடிதம் அனுப்ப வேண்டும்; இயக்குனரகம் அதை பரிசீலிக்கும்' என, தெரிவித்துள்ளார்.
கடந்த 8 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவே இல்லை. ஆனால் பதவி உயர்வு மட்டும் வைத்து நிரப்பி வருகிறது கல்வித்துறை. கடந்த ஆட்சியில் இருந்த அதே நிலை. இருக்கும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் என்று இரண்டிலும் நிரப்பாமல் பதவி உயர்வு மட்டும் கொடுத்து டெட் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான வேலை இல்லாமல் இருப்பவர்களை மேலும் நோகடித்து வருகிறது கல்வித்துறை. இந்த ஆட்சியில் இது மாற்றம் பெறும் என்று வாக்களித்தால் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் மூலம் நிரப்புகிறது கல்வித்துறை.
ReplyDeleteநீ ஆசிரியர் தானே. முட்டாள்தனமா தலைப்பு போடுறையே உனக்கு அறிவு இல்லையா?
ReplyDelete