சட்டப் பல்கலை. தேர்வில் குழப்பம்: பழைய வினாத்தாள் கொடுத்ததால் அதிர்ச்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Oct 12, 2022

சட்டப் பல்கலை. தேர்வில் குழப்பம்: பழைய வினாத்தாள் கொடுத்ததால் அதிர்ச்சி

 

மும்பை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற சட்டப் படிப்பு தேர்வின்போது, மாணவர்களுக்கு வழங்கிய வினாத்தாள் கடந்த ஆண்டுடையது என்று தெரிந்ததும், தேர்வு மைய அதிகாரிகள் உடனடியாக வினாத்தாளை வாங்கிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


பல்வேறு கல்லூரிகளில் தேர்வு 11 மணிக்குத் தொடங்கிய நிலையில், தேர்வு மையங்களில் மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. பிறகுதான், தவறுதலாக கடந்த ஆண்டு வினாத்தாள் அனுப்பி வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அனைத்துக் கல்லூரிகளிலும் வினாத்தாளை திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டது.


தேர்வெழுத வந்த மாணவர்களுக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல், வினாத்தாள் கொடுத்த சில நிமிடங்களில் திரும்ப வாங்கப்பட்டதால் அதிர்ச்சியுடன் காத்திருந்தனர்.


அவர்கள் அனைவரும் பிற்பகலில் வந்து தேர்வெழுதுமாறு அறிவுறுத்தப்பட்டு, புதிய வினாத்தாள் வரவழைக்கப்பட்டு மீண்டும் தேர்வு தொடங்கி நடைபெற்றுள்ளது.


அதாவது இ-டெலிவரி முறையில்தான் கல்லூரிகளுக்கு வினாத்தாள் அனுப்பப்படுகிறது. மின்னஞ்சல் வழியாக பல்கலைக்கழகத்தில் இருந்து வினாத்தாள் அனுப்பப்பட்டதும், அந்தந்த கல்லூரிகள் அதனை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளும். அவ்வாறு பல்கலைக்கழகத்திலிருந்து வினாத்தாள் அனுப்பிய பிறகுதான், அது கடந்த ஆண்டுடைய வினாத்தாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் தேர்வுகள் தொடங்கிவிட்டதால் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி