ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 8, 2022

ஆசிரியர் நியமனத்துக்கான போட்டித் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

 

ஆசிரியர் நியமனத்துக்காக அரசுஅறிவித்துள்ள போட்டித் தேர்வைரத்து செய்ய வேண்டும் என்றுமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரைஆண்டுகள் கடந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை போட்டித் தேர்வின்றி பணியமர்த்துவது குறித்தோ, வெயிட்டேஜ் முறையைநீக்குவது குறித்தோ எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.


போட்டித் தேர்வை எதிர்த்து குரல் கொடுத்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு, தகுதி தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியத்தால் போட்டித் தேர்வுநடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ‘திராவிட மாடல்’ என்றபோர்வையில் தேர்தல் வாக்குறுதிக்கு முற்றிலும் முரணாக திமுகஅரசு முடிவெடுத்ததற்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். போட்டி தேர்வை ரத்துசெய்து,தேர்ச்சி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

9 comments:

  1. எல்லாம் சரி. உங்கள் ஆட்சியில் மட்டும் என்ன செய்தீர்கள். No posting after the year 2013

    ReplyDelete
  2. இத நீங்க தான கொண்டு வந்தீங்க..... அப்போ உங்க மண்டைல அறிவு இல்லையா

    ReplyDelete
  3. டெட் தேர்ச்சி பெற்று பல வருடங்களாக காத்திருக்கும் இவர்கள் 9 வருடங்களாக காத்திருக்கும் நிலை உங்களுக்கு தெரியவில்லை. கேட்டால் நிதியில்லை. ஆனால் முன்னாள் உங்கள் அமைச்சர்கள் அனைவரும் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியும். எங்கே போனது அவ்வளவு நிதி? போட்டித் தேர்வு உள்ளிட்ட குழப்பங்கள் கொண்டு வந்து ஆசிரியர் ஆகும் கனவை லட்சக்கணக்கான படித்தவர்களை நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டு இப்போது ஏன் இந்த கோரிக்கை

    ReplyDelete
  4. ஐயா. தாங்களும் 10 ஆண்டுகளும் ஆட்சியில் இருந்தீர்கள் . அப்பொழுதிலிருந்து இலவுகாத்த கிளிப் போல் காத்திருக்கிறோம்....... ஏமாற்றமே பெருத்த மிச்சம்.......

    ReplyDelete
  5. ஒபிஎஸ் கேன பூ.... உன் ஆட்சியில உன் வாயில வாழைப்பழம் வச்சினு இருந்தியா?

    ReplyDelete
  6. இதற்கு காரணமே நீங்கதான்

    ReplyDelete
  7. ரெண்டு dasshum அப்டி தான்

    ReplyDelete
  8. எப்படி வெட்கமே இல்லாம ஒரு அறிக்கை இப்படி விடுதீங்க தெரியல. 149 அதிமுக காரணம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி