MBBS, BDS - இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 31, 2022

MBBS, BDS - இட ஒதுக்கீடு பெற்ற 7,036 பேர் 13 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்: மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக் கான பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை பெற்ற 7,036 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு மருத்துவக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.


மருத்துவக் கல்வி இயக்ககம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைனில் நடந்த பொதுப் பிரிவு கலந்தாய்வில் தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணைபெற்றவர்களுக்குச் சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறவுள்ளது. தற்காலிக இட ஒதுக்கீட்டு ஆணை, நீட் தேர்வு அனுமதி அட்டை, நீட் மதிப்பெண் அட்டை, 10, 11, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச்சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்),தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தகுதிச் சான்றிதழ் (தகுதியானவர்கள் மட்டும்), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (10) ஆகிய 13 ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னர், இறுதி இட ஒதுக்கீட்டு ஆணை பெறுபவர்களின் விவரங்கள் சுகாதாரத் துறை இணையதளத்தில் வெளியிடப்படும். முதல் சுற்றுகலந்தாய்வில் இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றவர்கள் நவம்பர் 4-க்குள் கல்லூரிகளில் சேர வேண்டும். அப்போது, அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களைக் கல்லூரிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி