TET தேர்வர்கள் ஆர்ப்பாட்டம் ! - போட்டி தேர்வு இன்றி நியமனம் தேவை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 4, 2022

TET தேர்வர்கள் ஆர்ப்பாட்டம் ! - போட்டி தேர்வு இன்றி நியமனம் தேவை!

ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்களை, போட்டி தேர்வு இன்றி அரசு பள்ளி ஆசிரியர்களாக நியமிக்க வலியுறுத்தி, பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், தகுதி தேர்வான, 'டெட்' தேர்ச்சி பெற்றவர்களுக்கு, புதிதாக நியமன தேர்வு ஒன்று, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் என, தமிழக பள்ளிக் கல்வி துறை அறிவித்தது.


இந்த உத்தரவை எதிர்த்தும், தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை தாமதமின்றி நிரப்பக் கோரியும், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்த பட்டதாரிகள், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், மாநிலம் முழுதும் இருந்து, நுாற்றுக்கணக்கான பட்டதாரிகள் பங்கேற்றனர். பெண்கள் தங்களின் குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.


கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, தேர்ச்சி மூப்பு அடிப்படையில், பணி நியமனம் வழங்க வேண்டும். அரசு அறிவித்துள்ள பணி நியமன போட்டி தேர்வு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 30 ஆயிரம் இடங்களுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தற்காலிக நியமன நடவடிக்கையை கைவிட வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

8 comments:

  1. NEET தேர்வை எதிர்க்கும் இந்த அரசு, ஆசிரியர் பணிக்கு மட்டும் தகுதித்தேர்வு மற்றும் போட்டித்தேர்வு என இரே தேர்வுகள் நடத்துவது மிகுந்த வேதனை அளிக்கிறது.....

    ReplyDelete
  2. அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிய முதுகலைபட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே தேர்வு .
    ஆனால் முதுகலை ஆசிரியர்களுக்கு கீழ் பட்டதாரி ஆசிரியர் பணி புரிய ஆசிரியர் தகுதி தேர்வு என்று ஒன்றாம் அதற்கு பின் நியமனத் தேர்வு என்று ஒன்று வைப்பார்களாம் அந்த நியமனத்தேர்வின் பாடத்திட்டமும்(SYLLABUS) முதுகலை பட்டதாரி ஆசிரியர் பாடத்திட்டத்தை விட பலமடங்கு அதிகமாக வைத்துக் கொள்வார்களாம் இது என்னடா டுபாக்கூர் நியாயம்.
    உயர் பதவியான
    முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரே தேர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் இரண்டு தேர்வா அநியாயம் டா டேய்

    ReplyDelete
  3. கடந்த 8 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவே இல்லை. ஆனால் பதவி உயர்வு மட்டும் வைத்து நிரப்பி வருகிறது கல்வித்துறை. கடந்த ஆட்சியில் இருந்த அதே நிலை. இருக்கும் இடங்களில் பதவி உயர்வு மற்றும் நேரடி நியமனம் என்று இரண்டிலும் நிரப்பாமல் பதவி உயர்வு மட்டும் கொடுத்து டெட் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான வேலை இல்லாமல் இருப்பவர்களை மேலும் நோகடித்து வருகிறது கல்வித்துறை. இந்த ஆட்சியில் இது மாற்றம் பெறும் என்று வாக்களித்தால் ஏமாற்றமே மிஞ்சியது.

    ReplyDelete
  4. முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு இரண்டிலும் நிரப்பும் கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மட்டும் வைத்து நிரப்பி வருகிறது.

    ReplyDelete
  5. டேய் சுடலை ஸ்டாலின் வெங்காயம் படித்த பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம் உன் கண்ணுக்கு தெரியவில்லை குழந்தைகளுடன் போராடும் என் சகோதரிகளின் குரல் உன் கண்ணுக்கு தெரியவில்லையா வாக்கு சேகரிக்க வந்த போது சொன்ன வார்த்தைகள் என்ன ஆச்சு யோசித்து பார்

    ReplyDelete
  6. நந்தகுமார் தான் இதற்கு காரணம், எல்லா PRT யும் BT ASSISTANT TA POSTING AH TRANSFER பண்ணிட்டான் பலபேருடைய வாழ்க்கை ????

    ReplyDelete
  7. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சென்னையில் போராடியவர்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வது மிகப்பெரிய கொடூரமானது. எங்கடா போன பொறம்போக்கு நாயே இதுவரை உன் கவனத்திற்கு வரவில்லையா...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி