2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 22, 2022

2022-2023 ஆம் ஆண்டிற்கான அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பணியாளர் நிர்ணயம் செய்வது சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ...


குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் , 2009 பிரிவு 19 மற்றும் 25 ன் படி அமைந்துள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படியும் , அதனைத் தொடர்ந்து பார்வை 2 இல் கண்டவாறு வெளியிடப்பட்ட அரசாணைகளின்படியும் , ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


 இதனடிப்படையில் , தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் , உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பாக , பார்வை 3 இல் காணும் அரசாணையின்படி , சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரே ( தொடக்கக்கல்வி ) தகுதிவாய்ந்த அலுவலராக உள்ளார்.


எனவே இதனடிப்படையில் தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப்பள்ளிகளுக்கும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயம் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலரால் ( தொடக்கக்கல்வி ) நிர்ணயம் செய்யப்பட்டது தொடர்பான கூட்டம் 28.11.2022 மற்றும் 29.11.2022 ஆகிய தேதிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இணைப்பில் கண்டுள்ள மாவட்டங்கள் வாரியாக நடைபெறும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தெரிவிக்கப்படுகிறது.


மேலும் , மேற்படி கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளையும் , மேற்படி கூட்டத்தில் சரிபார்ப்பு பணிக்கான பணியினை மேற்கொள்ள 15 குழுக்கள் அமைத்திடவும் , இக்குழுவில் வட்டாரக் கல்வி அலுவலர் -1 , கண்காணிப்பாளர் -1 , உதவியாளர் -2 ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் , மேற்படி பணியினை மேற்கொள்ள பணியாளர்கள் தேவைப்படின் , அருகாமை மாவட்ட வட்டாரக் கல்வி அலுவலர் / அலுவலகப் பணியாளர்களை உட்படுத்தி கொள்ளவும் தஞ்சாவூர் மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக்கல்வி ) கேட்டுக் கொள்ளப்படுகிறார்.


 மேலும் , இக்குழுவானது 05 குழுக்கள் துவக்கப்பள்ளிக்கானதாகவும் , 10 குழுக்கள் நடுநிலைப்பள்ளிக்கானதாகவும் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Staff fixation 2022-2023 circular.pdf - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி