இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் – மெட்டாவின் அதிரடி நடவடிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 2, 2022

இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம் – மெட்டாவின் அதிரடி நடவடிக்கை!

 

உலக அளவில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் செயலியானது தீங்கு விளைவிக்கும் நடத்தைகளை தடுக்கும் வகையில் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தியர்களின் 26.85 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தடை செய்துள்ளது.


வாட்ஸ்அப்:

சமூக வலைத்தளங்கள் தற்போதைய நவீன உலகில் நமக்கு பெரிதும் பயன்படகூடிய ஒன்றாக உள்ளது. அதே நேரத்தில் இதனால் சில தீமைகளும் நடந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு இந்தியாவில் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்களை கொண்டுள்ள சமூக வலைத்தளங்கள் மாதந்தோறும் பயனர்களின் புகார் மற்றும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.


நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் கணக்குகளை ரத்து செய்யவும் உத்தரவிட்டது. இதனையடுத்து அண்மையில் ட்விட்டர் நிறுவனம் குழந்தைகள் சம்மந்தப்பட்ட பாலியியல் தொடர்பான கருத்துக்கள் பகிரப்பட்டதன் காரணமாக இந்தியர்களின் 52,141 ட்விட்டர் கணக்குகளை தடை செய்துள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் கடந்த செப்டம்பரில் மட்டும் இந்தியவர்களின் 26.85 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது.


கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தடை செய்யப்பட்ட கணக்குகளை விட செப்டம்பரில் தடை செய்யப்பட்ட வாட்ஸ் அப் கணக்குகளின் எண்ணிக்கை 15% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செப்டம்பரில் பெறப்பட்ட 666 புகார்களில் 23 புகார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி