பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் இடமாற்றம் ? மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2022

பள்ளிக்கல்வி உயர் அதிகாரிகள் இடமாற்றம் ? மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் பதவி ?

பள்ளிக்கல்வி துறையின் மூத்த இயக்குனர் ஓய்வு பெற்றுள்ள நிலையில், கமிஷனர், இயக்குனர்கள், இணை இயக்குனர் பதவிகளுக்கு இடமாறுதல் பட்டியல் தயாராகியுள்ளது; அதிகார வரம்புகளும் மாற்றப்பட உள்ளன.


தமிழக பள்ளிக் கல்வி துறையின் மூத்த இயக்குனர்களில் ஒருவரான கருப்பசாமி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனராக பணியாற்றி வந்தார்; இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்.


இந்நிலையில், மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், தனியார் பள்ளி இயக்குனரகமாக மாற்றப்பட உள்ளது.

பதவி உயர்வு


கூடுதல் அதிகாரம் மற்றும் முக்கியத்துவம் நிறைந்த இந்த பதவியில், தற்போதைய இயக்குனர்களில் ஒருவருக்கு இடமாறுதல் வழங்கப்பட உள்ளது.


இதன் காரணமாக, பள்ளிக் கல்வி துறையில் இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் அளவில், சிறிய அளவில் மாற்றம் செய்ய, தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


தகுதியான இணை இயக்குனர்கள் சிலருக்கு, இயக்குனராக பதவி உயர்வும் வழங்கப்பட உள்ளது. நீதிமன்ற வழக்கு மற்றும் பணி மூப்பு விபரங்களை கணக்கில் எடுத்து, பதவி உயர்வு பட்டியல் தயாராகிஉள்ளது.


பள்ளிக் கல்வியின் அதிகாரம் மிக்க பொறுப்பான, பள்ளிக் கல்வி இயக்குனர் பொறுப்பை மீண்டும் அமல்படுத்த லாமா என்றும் அரசு ஆலோசித்து வருகிறது.


இயக்குனருக்கு சமமான நிலையில், கலெக்டர் அந்தஸ்தில் உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரியை, கமிஷனர் பதவியில் நியமிக்கலாம் என்றும், கமிஷனருக்கு, பள்ளிக்கல்வியின் அனைத்து பிரிவுகளின் கண்காணிப்பு பணிகளை மட்டும் வழங்கலாம் என்றும், வரைவு கருத்துரு தயாரிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.


முதல்வர் ஆலோசனை


இந்த கருத்துருவில், சட்ட ரீதியான சாதக, பாதகங்கள் மற்றும் அரசின் நிர்வாக நிலைப்பாடுகளின் அடிப்படையிலும், முதல்வர் ஆலோசனை அடிப்படையிலும், முடிவு எடுக்கப்பட உள்ளது.


இந்த முடிவுகளின்படி, பள்ளிக்கல்வியில் அதிகார பகிர்வு மற்றும் அதிகாரிகளின் மாற்றங்கள் ஓரிரு நாளில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



3 comments:

  1. ஒரே பள்ளியில் பத்து ஆண்டுகளுக்கு மேல்
    பணிபுரியும் ஆசிரியர்களை
    கட்டாய பணியிட மாறுதல் செய்யாதவரை,
    கற்பித்தலில், மாற்றம்,
    முன்னேற்றம் கிடையாது

    ReplyDelete
    Replies
    1. ஒரே பள்ளியில் பத்து ஆண்டுகள் மேல் பணியாற்றுபவர்களை பணியில் மூத்தோர் என்று அவர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அதை எல்லாம் செய்ய அரசாங்கம் செய்யாது.

      Delete
  2. 100 சதவீதம் உண்மை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி