பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2022

பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஆசிரியர் கூட்டணி ஆர்பாட்டம்

 

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி, தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடந்தது.


சங்க மாநில தலைவர் லெட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்காமல், காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும்.


ஊதியக்குழு அறிக்கைகளை நாடு முழுதும் ஒரே மாதிரியாக அமல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாட்டை நீக்க, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.

4 comments:

  1. என்ன செய்தாலும் ஒன்று நடக்காது‌...? இது சமூக நீதிக்கான ஆட்சி..!

    ReplyDelete
  2. கண்துடைப்பு நாடகம்.. இரண்டு பேருமே.

    ReplyDelete
  3. ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் ஒற்றுமை இல்லை.பல சங்கங்கள் இருப்பதால் அரசுக்கு சாதகமான நிலை உள்ளது.வங்கிஊழியர்கள் போல் ஒற்றுமை யாக போராடினால் தான் வெற்றி பெறமுடியும்.நடக்குமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி