பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும்

 

நாட்டின் வளா்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது, எதிா்காலத்தில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்துள்ளாா்.


பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி வந்தது. அத்திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அரசு சாா்பில் 14 சதவீதம் செலுத்தப்படும்.


2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசுப் பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் புதிய திட்டத்தில் பணியாளா்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் குரலெழுப்பி வருகின்றனா்.


அரசியல் நோக்கத்துக்காக அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எதிா்க்கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முயல்வது கவலை அளிக்கிறது. அதனால் ஏற்படும் நிதிச் சுமை எதிா்காலத்தில் வரி செலுத்துவோரின் தலையிலேயே விழும். தற்போது வரி செலுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படாது.


இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்ற நீண்டகால இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். அரசால் தற்போது அறிவிக்கப்படும் திட்டங்கள், எதிா்காலத்தில் நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். எதிா்கால மக்களின் நலனைக் காக்கும் நோக்கில் தற்போதைய அரசுகள் செயல்பட வேண்டும்.


நாட்டின் வளா்ச்சியை அதிகரிப்பதற்கு தனியாா் துறை முதலீடு அதிகரிக்க வேண்டியது அவசியம். உக்ரைன்-ரஷியா போா் காரணமாக உரத் துறையும் பெட்ரோலியத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அசாதாரண சூழல் காரணமாகவே வட்டி விகிதங்களை உயா்த்த வேண்டிய கட்டாயம் இந்திய ரிசா்வ் வங்கிக்கு (ஆா்பிஐ) ஏற்பட்டது’’ என்றாா்.

3 comments:

  1. தற்போதைய வரிவிதிப்பு முறை மக்களை பாதிக்கவில்லையா.அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை கேட்டால் உடனே மக்கள் பாதிக்கப் படுவார்கள் என்று கூறுவது உள்நோக்கம் கொண்டது.

    ReplyDelete
  2. இத சொல்லூரேயே நாயே நீ ஓய்வூதியம் பெறுவயில

    ReplyDelete
  3. அரசாங்கம் முன்னம் கார்ப்பரேட் கம்பெனி அல்ல வரி வாங்குவதும் மக்களுக்கு அரசு பணியாளருக்கும் சம்பளம் தருவதும் ஓய்வுதியின் தருவதம் தான் அரசினுடைய பணி அதை தவிர்த்து விட்டு. 5 ஆண்டுகள் இருக்கும் அரசியல்வாதிகளுக்கும் சில ஆண்டுகாலம் இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கும் ஓய்வுதியும் என்ற பெயரில் வழங்குவது மட்டும் நியாயமா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி