அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2022

அரசுப் பணியாளர்கள் மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு

  (Strict restrictions on taking Medical Leave for Government Employees)...

மருத்துவச் சான்று இனி ஒரே சமயத்தில் 5 நாட்களுக்கு மட்டுமே பெற முடியும். ஐந்து நாட்களுக்கு மேலும் பெற வேண்டுமெனில் பிளட் டெஸ்ட், இசிஜி, எக்ஸ்ரே போன்ற டெஸ்ட் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும். ஐந்து நாட்களுக்கு மேல் ஐந்து மடங்குகளில் விடுப்பு நாட்கள் வழங்கும்பொழுது மேற்கண்ட இணைப்புகள் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். 


மேலும் விடுப்பு சான்றிதழ் வழங்கும் மருத்துவர் தனது நோயாளியின் விவரங்களை பதிவேடு எண்ணின் வரிசை எண் மற்றும் உள்நோயாளி எனில் உள்நோயாளி பதிவேடு வரிசை எண்  வரிசை ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்க வேண்டும். மேலும் மருத்துவச் சான்றின் ஒரு நகலை அவர் எப்பொழுதும் பராமரிக்க வேண்டும். 


அந்நகல் ஐந்து ஆண்டுகளுக்கு தேவைப்படும் பொழுது ஆய்வுக்கு உட்படுத்தும் வகையில் மருத்துவ சான்றினை ஐந்து ஆண்டுகள் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். இனி மருத்துவ விடுப்பு எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது.

7 comments:

 1. ஒரு அரசுப்பள்ளி ஆசிரியையாக இதை நான் வரவேற்கிறேன்.....
  மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெறும் ஆசிரியர்கள்....கொஞ்சமாவது மனசாட்சியோடு நடந்து கொள்வது தர்மம்.......

  ReplyDelete
 2. கணவர்: எனக்கு உடல்நிலை சரியில்லை
  மனைவி: எனக்கு மருத்துவ விடுப்பு கொடுக்க மாட்டார்கள்
  டாக்டர்: உங்கள் கணவரை சரியாக கவனிக்காததால் அவர் காலமாகிவிட்டார்.
  அரசாங்கம்:DA அறிவிப்பு
  மனைவி:???????

  ReplyDelete
 3. இது அரசாணை கிடையாது மருத்துவ கவுன்சில் வெளியிட்டுள்ள அறிவிப்பு மட்டுமே. அரசாங்கம் தனியாக அரசாணையோ அல்லது அந்தந்த துறை சார்ந்த மூத்த அலுவலர் கடிதம் வெளியிட்டால் மட்டுமே இத்தகைய நடைமுறை பொருந்தும் அதுவரை பழைய விதிமுறைகளை பொருந்தும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்

  ReplyDelete
 4. தமிழ்நாடு அரசு இதற்கு இன்னும் அரசாணை வெளியிடவில்லையே

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி