TET Paper 2 தேர்வு எப்போது? ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 3, 2022

TET Paper 2 தேர்வு எப்போது? ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் தகவல்!!!

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய இடைநிலை ஆசிரியர்கள் தாள் 1 ல், பட்டதாரி ஆசிரியர்கள் தாள் 2 ஆகியவற்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 எழுதவதற்கு விரும்பும் தேர்வர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.


அதில் ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 எழுதுவதற்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களுக்கு அக்டோபர் 14 ந் தேதி முதல் 20 ந் தேதி வரையில் கம்ப்யூட்டர் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான விடைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 எழுதுவதற்கு 4 லட்சத்து ஆயிரத்து 885 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இவர்களுக்கான தேர்வினை டிசம்பர் மாதம் நடத்துவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கான தேதிகள் விரைவில் முடிவுச் செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. தேர்வினை நடத்துவதற்கு தேவையான கல்லூரிகளின் விடுமுறையை கணக்கில் கொண்டு தேர்வுத் தேதி வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் தெரிவித்தார்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி