தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் 17 பேர் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 30, 2022

தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகளில் 17 பேர் தேர்ச்சி

 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், SSC,IBPS,RRB ஆகிய முகமைகள் நடத்தும் போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்வலர்களுக்கு தமிழக அரசின் சார்பில் இயங்கும் போட்டித் தேர்வுகள் பயிற்சி மையங்களில் கட்டணமில்லாப் பயிற்சி வகுப்புகள். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராயா கல்லூரி, நந்தனத்தில் உள்ள அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வில் வெற்றி பெற்று தற்போது பணியிலிருக்கும் அரசு அலுவலர்களைக் கொண்டும், அனுபவம் வாய்ந்த கல்லூரி பேராசிரியர்களைக் கொண்டும் இம்மையங்களில் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடத்தப்படுகிறது.


இரண்டாம் நிலைக்காவலர் (ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறைக்காவலர். தீயணைப்பாளர் ஆகிய பதவிகளுக்கான எழுத்துத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களில் 164 தேர்வர்களுக்கு இப்பயிற்சி மையங்களில் 3 மாத காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டது. மேற்படி பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அன்று நடத்தப்பட்டு அண்மையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில், இப்பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 17 தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று அடுத்தக்கட்ட உடல்தகுதி தேர்விற்கு தகுதி பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி