அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 30, 2022

அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி: தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம்


உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

தமிழகத்தில், 2009-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும், இதற்கு முந்தைய மாதத்தில் பணியமா்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா்கள், குடும்பத்துடன், செவ்வாய்க்கிழமை முதல் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் காகர்லா உஷாவுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்லியடைந்த நிலையில் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியுடன் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் இந்த பேச்சுவார்தையும் தோல்வியில் முடிவடைந்தது. 


அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டவில்லை என்றும் முதல்வரை சந்திக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார். 

7 comments:

 1. Pay commision அமைக்கப்படும் போதெல்லாம் இந்த பாகுபாடு வந்துகொண்டே இருக்கும் ஆட்சிக்கு வர மாட்டோம்னு அவர் வாக்குறுதி கொடுத்தார் but நீங்க ஜெயிக்க வைச்சிட்டீங்க இது நிறைவேற்ற முடியாதுன்னு அவருக்கு தெரியும்

  ReplyDelete
 2. வேலையே இல்லாதவங்கள பாத்து சந்தோஷப்பட்டுக்கோங்க, அதுதான் இந்த கால எதார்த்தம் 😄😄😄

  ReplyDelete
  Replies
  1. 50000 மதிப்புள்ள வேலையை செய்து விட்டு 5000 கூலி வாங்கும் முதுகெலும்பற்றவர்களின் பேச்சு இது.
   தன் உழைப்புக்கு ஏற்ற கூலி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் அதுவே உழைப்பின் பெருமை. அது கிடைக்காத பட்சத்தில் போராடி பெற வேண்டும் அவனே வீரன் .கிடைக்கும் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு அதிக வேலை செய்பவர் கோழை. உழைப்பாளிகளை அடிமைகளாக மாற்ற வித்திடுபவரும் அவனே.

   Delete
 3. ஓட்டு போடாதவர்களுக்கும் சேர்த்து தான் உழைக்கிறேன்....என்று மேடைக்கு மேடை பேசும் முதல்வரே....ஓட்டு போட்டவர்களுக்கு என்ன செய்தீர்கள்....

  ReplyDelete
 4. 10.03.2020 க்கு பிறகு உயர்கல்வி முடித்தவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கொடுத்த வாக்குறுதியைத் தான் நிறைவேற்ற முடியவில்லை......

  10.03.2020 க்கு முன்பு உயர்கல்வி முடித்தவர்களுக்கே ஊக்க ஊதியம் வழங்க இன்னும் வாய்திறக்காத வக்கத்த அரசு...

  ReplyDelete
 5. ஆக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்..... ச்சைக்.... பழக்க தோஷத்துல வருது.... நிதிநிலைமை சரியானதும் படிப்படியாக சரி செய்யப்படும்....

  ReplyDelete
 6. Irukkura velaiya kapppathikonga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி