தற்காலிக பணியிடங்கள்: 600 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 11, 2022

தற்காலிக பணியிடங்கள்: 600 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு

தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் 600 ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் 2008-2009-ஆம் கல்வியாண்டு தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 600 ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றுவிட்டது.


இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இந்த ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக் கல்வி ஆணையா் கடிதம் அனுப்பி உள்ளாா். அதையேற்று 600 ஆசிரியா்களுக்கும் நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, ஊதியப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அலுவலா்கள் அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி