'கரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை' - அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 31, 2022

'கரோனா கால ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை' - அரசாணை வெளியீடு

 

கரோனா காலத்தில் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. 


கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்றால் உலகம் முழுவதுமே பெரும் பாதிப்பை எதிர்கொண்டது. தமிழகத்திலும் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா நோயாளிகள் அதிகரித்ததையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஒப்பந்த முறையில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்தப்பட்டனர்.


இந்நிலையில் இவர்களின் பணிக்கால ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதற்கு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

1 comment:

  1. ஆக எடப்பாடி பழனிசாமி அவர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும்..... ச்சைக்.... பழக்க தோஷத்துல வருது.... நிதிநிலைமை சரியானதும் படிப்படியாக சரி செய்யப்படும்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி