இக்னோ பல்கலையில் நுழைவு தேர்வின்றி எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 29, 2022

இக்னோ பல்கலையில் நுழைவு தேர்வின்றி எம்.பி.ஏ., - எம்.சி.ஏ.,

நுழைவுத் தேர்வு இன்றி, எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளில், தொலைதுார கல்வியில் மாணவர்கள் சேரலாம் என, இக்னோ பல்கலை அறிவித்து உள்ளது.


இக்னோ எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை, தொலை துார கல்வி வாயிலாக இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.


தற்போது, 2023க்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.


இதுகுறித்து, இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குனர் பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதலுடன், இப்பல்கலையில் வழங்கப்படும், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, நுழைவுத்தேர்வு இன்றி சேர்க்கை நடக்கிறது.


இதில் சேர விரும்புவோர், https://ignouiop.samarth.edu/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி, 'ஆன்லைன்' வாயிலாக சேர்ந்து கொள்ளலாம்; விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31.


குறிப்பிட்ட சில இளங்கலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளில் எஸ்.சி., - எஸ்.டி., வகுப்பினருக்கு கல்வி கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.


கூடுதல் விபரங்களை, www.ignou.ac.in என்ற பல்கலை இணையதளம் அல்லது சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் இயங்கும் மண்டல அலுவலகத்தை, 044- - 2661 8040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி