பகுதிநேர ஆசிரியர்கள் பொங்கல் போனஸ் - கோரிக்கை - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 29, 2022

பகுதிநேர ஆசிரியர்கள் பொங்கல் போனஸ் - கோரிக்கை

 

தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் பழ.கௌதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது...


அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு போனஸ் இல்லை என்பது வேதனை அளிக்கிறது. பகுதிநேர பணியாளர்களுக்கு 1000 ரூபாய் போனஸ் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் 240 நாட்கள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் வாரத்தில் மூன்று அரை நாட்கள் மட்டும் பணிபுரிவதால் இந்த போனஸ் அறிவிப்பு எங்களுக்கு பொருந்தாது.எனவே 240 நாட்கள் என்ற விதியை தளர்த்தி குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் போனஸ் வழங்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

3 comments:

  1. பொய் சொல்லி ஆட்சி பிடிப்பதில் திராவிடமும் தேசியமும் ஒன்றே ...

    ReplyDelete
  2. இனி பி.எட் மற்றும் டி.டி.எட் தேர்வுகள் எதற்கு? தகுதி தேர்வு எழுதி போட்டி தேர்வு எழுதி என தேர்வுகளையே எழுதிக் கொண்டு வாழ்க்கையை வீணடிப்பதா? திமுக ஆட்சி அமைத்தால் சீனியாரிட்டி கொண்டு வருவார்கள் என்று ஒரு சாராரும் தகுதி தேர்வு மட்டுமே என்று ஒரு சாராரும் தம்பி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆட்சி அமைக்க வைத்தார்கள். பகுதி நேர ஆசிரியர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு ஆட்சி அமைக்க உதவினார்கள். ஆனால் அனைவரும் தற்போது நன்கு ஏமாற்றம் அடைந்து உள்ளனர். அதிமுக அரசு செய்த அதே வயிற்றில் அடிக்கும் வேலையை இவர்களும் செய்தால் ....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி