கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Dec 12, 2022

கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு கோரி தொடரப்பட்ட வழக்கு சார்ந்த விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரிந்த போது பணிக்காலத்தில் இறந்த அரசு ஊழியர் / ஆசிரியர்களின் வாரிசுதாரர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடரப்பட்ட வழக்குகள் சார்ந்த விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து , மனுதாரரால் வழக்கு தொடர நேரிட்டதற்கான உண்மையான காரணம் நியமன அலுவலரான முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் அனுப்பப்பட வேண்டும் என்பதுடன் , நீதிமன்ற வழக்குகள் தொடர்பான கோப்பினையும் சார்ந்த பிரிவு உதவியாளர்கள் எதிரே குறிப்பிடப்பட்ட தேதியில் ( அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது ) விடுபாடுகள் ஏதுமின்றி பள்ளிக் கல்வி ஆணையரக ' ஜே ' பிரிவிற்கு தவறாது நேரில் வருகை புரிந்து முதன்மைக் கல்வி அலுவலரின் கையொப்பத்துடன் உரிய விவரங்களை குறிப்பிட்ட படிவத்தில் அளித்திட வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது .


CoSE - Court Case Detail.pdf - Download here...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி