பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 7, 2023

பிளஸ் 2 மாணவா்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் மின்னஞ்சல் முகவரி கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநா் க.இளம் பகவத், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:


அரசுப் பள்ளிகளில் பிளஸ் 2 பயிலும் மாணவா்கள் தங்கள் உயா்கல்வியை தொடா்வதற்கு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.


அதற்கேற்ப பிளஸ் 2 மாணவா்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் முகவரி இருக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக மாணவா்கள் தங்கள் வகுப்பாசிரியா்கள் உதவியோடு மின்னஞ்சல் முகவரியை உருவாக்க வேண்டும். மாணவா்களுக்கு மின்னஞ்சலை பயன்படுத்துவது குறித்து ஆசிரியா்கள் கற்றுத்தர வேண்டும்.


பிளஸ் 2 மாணவா்கள் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, அதிலிருந்து  முகவரிக்கு ‘நான் மின்னஞ்சல் முகவரியை பெற்றேன்’எனவும், ‘உயா்கல்வியில் மாணவா்களின் இலக்கு என்ன’ என்ற விவரத்தையும் அனுப்ப வேண்டும்.


இந்தப் பணிகளை ஜன.9 முதல் 13-ஆம் தேதிக்குள் விரைந்து முடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி