பள்ளிக் கல்வித்துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 27, 2023

பள்ளிக் கல்வித்துறையில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றம் : அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினாா்.


நாட்டின் 74-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை சென்னை காமராசா் சாலையில் உள்ள மாநில சாரணா் இயக்குநரகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினாா்.


இதையடுத்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சாரணா் இயக்கத்தில் 10 லட்சம் மாணவா்களை இணைக்க வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதை நோக்கி பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையில் புதிய அறிவிப்புகள் வெளியாகும். மதுரை கலைஞா் நூலகம் கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது.


இதற்கான திறப்பு விழா குறித்து விவரங்களை தமிழக அரசு அறிவிக்கும். நமது நிதிநிலையை சரிசெய்யும் பணியில் முதல்வா் ஈடுபட்டுள்ளாா். பள்ளிக்கல்வித் துறை சாா்ந்த 29 தோ்தல் வாக்குறுதிகளில் 22 நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்களின் நிதிசாா்ந்த பிரச்னைகள் மட்டுமே நிறைவேற்றப்படாமல் உள்ளது.


தற்போது காலை உணவு திட்டம் 1,545 பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 500 பள்ளிகளில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் கொண்டுவரப்படும். சென்னையில் ‘ஜி20’ கல்வி கருத்தரங்கில் மத்திய மந்திரி தா்மேந்திர பிரதான் கலந்து கொள்ளும் போது தேசிய கல்விக் கொள்கையில் தமிழக அரசுக்கு இருக்கக்கூடிய ஆட்சேபனைகள் குறித்து தெரிவிக்கப்படும் என்றாா் அவா்.

12 comments:

  1. தாங்கள் நிறைவேற்றிய 22 வாக்குறுதிகள் ‌‌எவைஎன தெரிவித்தால் மிக்க நன்றி.

    ReplyDelete
  2. 177 வது உறுதி நிறைவேறவில்லை

    ReplyDelete
  3. ஏய்... எப்புட்றா....

    ReplyDelete
  4. 149 cancel
    Old pension scheme part time teachers permanent pannitanka
    In dream

    ReplyDelete
  5. எப்படிங்க இந்த மாதிரி மானமே இல்லாம பேசுறீங்க...

    ReplyDelete
  6. ஈரோடு போய் திருச்சி வந்தா திமுக..!

    ReplyDelete
  7. Rice saapidravan ipdi poi solla maataan

    ReplyDelete
  8. பொய் பொய்யா பேசுறவங்களுக்கு பேர் தான் பொய்யா மொழியோ ????

    ReplyDelete
  9. என்ன கிழிச்சீங்க விரல் எண்ணு "இறைவன் இருக்கிறான்" 😡😡😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி