42 வயதுக்கு மேல் ஆசிரியர் பணிக்கு வாய்ப்பில்லை: புத்தாண்டில் அமலானது கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 2, 2023

42 வயதுக்கு மேல் ஆசிரியர் பணிக்கு வாய்ப்பில்லை: புத்தாண்டில் அமலானது கல்வித்துறை உத்தரவு

 தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பொதுப்பிரிவில், 42 வயது வரை உள்ளவர்கள் தான், நேரடி ஆசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற விதிமுறை, நேற்று முதல் அமலுக்கு வந்தது.


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், சீனியாரிட்டி மற்றும் டி.ஆர்.பி., என்ற ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 58 வயது நிரம்பாதவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்விப்பணியை முழுமையாக செய்ய முடியாது என்பதாலும், கல்வித்துறையில் சீர்திருத்தங்களை கொண்டு வரும் வகையிலும், பொதுப்பிரிவில், ஆசிரியர் பணி நியமனத்துக்கு 40 வயதும், இதர பிரிவுகளில், 45 வயதும் என நிர்ணயிக்கப்பட்டது.


கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா பிரச்னையால், ஆசிரியர் நியமனங்கள் நடக்கவில்லை.


அந்த காலகட்டத்தில், ஆசிரியர் நியமனத்துக்கான வயதை கடந்தவர்களின் நலன் கருதி, கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பரில், கல்வித்துறை புதிய உத்தரவு வெளியிட்டது. அதன்படி, 2022 டிசம்பர் வரை, சிறப்பு நிகழ்வாக ஒருமுறை மட்டும் அமலாகும் வகையில், ஆசிரியர் நியமனத்துக்கு பொதுப்பிரிவுக்கு, 40ல் இருந்து, 45 வயதாகவும், இதர பிரிவினருக்கு, 45ல் இருந்து, 50 வயதாகவும் உயர்த்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று முன்தினத்தோடு இந்த உத்தரவுக்கான காலக்கெடு முடிந்து விட்டது.


கடந்த, 2021 செப்டம்பரில் வெளியிடப்பட்ட அரசு உத்தரவுப்படி, 2023ம் ஆண்டு, 1ம் தேதியில் இருந்து, ஆசிரியர் நேரடி நியமனத்துக்கான வயது வரம்பு, பொதுப்பிரிவுக்கு 42 ஆகவும், இதர பிரிவினருக்கு, 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது.


எனவே, இனி தமிழகத்தில், பொதுப்பிரிவில், 42 வயது முடியாதவர்களும், இதர பிரிவில், 47 வயது முடியாதவர்கள் மட்டுமே ஆசிரியர் பணி நேரடி நியமனத்துக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.


இந்த வயதை கடந்தவர்கள் ஆசிரியர் பணிக்கான படிப்பு முடித்திருந்தாலும், அது பயனில்லை என்ற நிலையும் உருவாகி உள்ளது.

6 comments:

 1. MLA MP க்களுக்கு 65 வயதை கடந்தாலும் பரவாயில்ல?

  ReplyDelete
 2. மகிழ்ச்சி... சிறப்பு...

  யாருக்கோ.....

  எங்களுக்கு ஊ..ஊ..

  ReplyDelete
 3. Aided schoole posting when they will release

  ReplyDelete
 4. ஆனால் DEO நேரடி நியமனம் மட்டும் ஏன் 60வயது.?

  ReplyDelete
 5. ஆட்சி மாறியும் வேதனையும் சோதனையும் மாறவில்லை படித்துவிட்டு தவிப்பவர்களுக்கு! பி.எட் கல்லூரிகளைத் திறந்துவிட்டு வயது வரம்பை (57 வயது வரை) அதிகப்படுத்தி அனைவரையும் படிக்கச் சொல்லிவிட்டு தற்போது 9 ஆண்டுகளாக பட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சிபெற்று விட்டு வேலைக்காக காத்திருக்கும் 42 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு எந்த வேலை வாய்ப்பையும் வழங்காமல் தற்போது இப்படி ஒரு பேரிடியை இறக்கினால் எங்கே சென்று அழுவார்கள்? கடந்த அதிமுக ஆட்சியில் ஃப்ரெஷர்ஸ் மட்டுமே பயன்பெறும் வகையில் தேர்வுமுறையை மாற்றி திறமையானவர்களின் மதிப்பெண்களை (யு.ஜி) தன்னாட்சிக்கல்லூரிகளில் படித்த புதியவர்களின் மதிப்பெண்களோடு ஒப்பிட்டு திறமையும் அனுபவமும் உள்ள ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும் புறக்கணிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்குப் பின் தற்போதும் புறக்கணிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? அதிலும் வயது அதிகம் உடையவர்களின் கோரிக்கையையும் திமுக அரசு தான் நிறைவேற்றும் என்ற நம்பிக்கை கொண்டோரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பேரிடி. இது போன்ற பேரிடிகளை படித்தவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த மாண்புமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஒருபோதும் செய்ய மாட்டார்கள். எங்கோ ஒரு மூலையில் குரல் எழுப்பினாலும் செவிகொடுத்துக் கேட்டு அதற்கான தீர்வுகளை தருவார். ஆனால் தற்போதைய ஆட்சி கலைஞர் ஆட்சி போன்று இல்லாமல் உள்ளது. பகுதி நேர ஆசிரியர்கள் ஒருபுறம் சொற்ப ஊதியத்தில் கதறிக்கொண்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்கள். அவர்களை நியமனம் செய்த அதிமுக ஆட்சி வஞ்சித்துவிட்டது. திமுக ஆட்சியை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம்பிக்கையுடன் விடியல் கிடைக்கும் என்று.

  ReplyDelete
 6. அடேங்கப்பா எந்த நாட்டிலும் இந்த மாதிரி புத்திசாலி இருக்கமாட்டாங்க,ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் life long.ஆனால் ஆசிரியர் நியமனத்துக்குage limit.super

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி