பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2023

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை, தமிழகத்தில் கொரோனா காலத்தில் மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இதில் தற்காலிகமாக பல ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பணி முடிந்து திரும்பும் வரை தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது உத்தரவிட்டுள்ளது.


தற்காலிக ஆசிரியர்கள் தேவையுள்ள பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் இந்த கல்வியாண்டு முடியும் வரை, அதாவது ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு, தற்காலிக ஆசிரியர்களை பணி அமர்த்தலாம். இந்த பணியினை வருகிற 9-ந்தேதிக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு பணியமர்த்தும்போது கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்விவரம் வருமாறு:

* இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் தகுதியுடையவராக இருப்பின் அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.

* பள்ளி மேலாண்மைக் குழுவின் வாயிலாக தற்காலிகமாக நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500-ம், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000-ம் மதிப்பூதியம் வழங்கப்படும்.

* இல்லம் தேடி கல்வி பணிடிகளில் ஈடுபட்டு இருக்கும் ஆசிரியர்கள் தங்கள் பணியை முடித்து எப்போது பள்ளிக்கு திரும்பினாலும், பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்படும் தற்காலிக ஆசிரியர்கள் உடனடியாக பணிவிடுப்பு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2 comments:

  1. Dai Already irukara Temporary Teachers ku salary podungadaaaa...

    ReplyDelete
  2. முந்தைய அதிமுக ஆட்சியும் தற்காலிக ஆசிரியர்களை ஒவ்வொரு வருடமும் நியமனம் செய்து பத்தாண்டுகளை எந்த நியமனமும் செய்யாமல் சென்றுவிட்டது. தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அந்த சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவித்துவிட்டு ஆனால் 42 வயதை நிர்ணயம் செய்து விட்டு சென்று விட்டார்கள். வருடாவருடம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தாலும் இருக்கும் பணியிடங்களை பதவி உயர்வில் மட்டுமே நிரப்பிவிட்டு தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றவர்களை நடுத்தெருவில் நிற்கவைத்துவிட்டு சென்றார்கள் முந்தைய ஆட்சியாளர்கள். இப்போதும் அதே நிலையை கையில் எடுத்து விடியலை எதிர்பார்த்தவர்கள் மத்தியில் பேரிடியை இறக்கியுள்ளார்கள். பி.எட் கல்லூரிகள் வைத்திருக்கும் அதிகம்பேர் அரசியல்வாதிகள் தான். அவர்களுக்கு ஏற்ற வகையில் பி.எட் படிப்பை 57 வயது வரை படிக்கலாம் என்று வயது வரம்பை உயர்த்திவிட்டு தற்போது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றும் 42 வயது என வயதை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இத்தனை ஆண்டுகள் பணிநியமனம் வழங்காமல் இருந்துவிட்டு தற்போது வயது வரம்பை நிர்ணயம் செய்வது நியாயமா? இதில் நியமனத்தேர்வு வேறு. முந்தைய ஆட்சியில் நிதி இல்லை என்று 10 ஆண்டுகளையும் கடத்தினார்கள். ஆனால் அரசியல்வியாதிகள் அனைவரும் எவ்வளவு சொத்து வாங்கி குவித்துள்ளார்கள் என்பது அவர்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் தெரியும். ஆனால் படித்தவர்களுக்கு வேலை போடவேண்டும் என்றால் நிதியில்லை அவர்களிடம். அதே தவறு கலைஞர் ஐயாவின் ஆட்சியிலும் நிகழக்கூடாது. தளபதியாரை நம்பி அவரவர் குடும்பம் மட்டுமல்லாது தெரிந்தவர்களிடம் எல்லாம் ஓட்டுபோடச் சொல்லி வற்புறுத்தினோம். இப்போது எங்களை கேள்வி கேட்கிறார்கள் இந்த ஆட்சியிலும் அதே நிலை தான் என்று. விடியும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம் தளபதியாரே!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி