பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2023

பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர மற்ற வேலைகளில் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை: அமைச்சர் அன்பில் மகேஷ்

பள்ளிகளில் மாணவர்களை படிப்பை தவிர பள்ளியை சுத்தப்படுத்துதல் உள்ளிட்ட வேறு எந்த வேலையிலும் ஈடுபடுத்தினால் சம்பந்தபட்ட ஆசிரியர்கள், அதற்கு காரணமானவர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தஞ்சாவூரில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: மாணவ-மாணவிகள் தன்னம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்.

நான் மாணவர்களின் தந்தை ஸ்தானத்தில் இருந்து தான் அவர்களுக்கான திட்டங்களை கொண்டு வருகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி கூறுவார். அதில் இருந்தே அவர் எந்த அளவுக்கு மாணவர்களின் படிப்பில் அக்கறை கொண்டுள்ளார் என்பது தெரிகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொது தேர்வில் மாணவர்களின் ஆப்சென்ட் விகிதம் மிக குறைவாக தான் இருக்கும். அனைத்து மாணவர்களும் விடுபடாமல் பொது தேர்வு எழுத வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கம். அதேப்போல் தேர்ச்சி வீதமும் கடந்த ஆண்டை விட கூடுதலாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். 

15 comments:

  1. பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுப்போல் நீங்கள் இதற்கு தக்க நடவடிக்கை எடுத்து "பணி நிரந்தரம்" செய்து அதற்கான அரசு ஆணை வழங்க வேண்டும் இதுதான் என் தாழ்மையான வேண்டுக்கோள்.

    ReplyDelete
  2. உங்களுடைய பொறுமையான காத்திருத்தல் கண்டிப்பாக பலன் தரும் நானும் வேண்டிக் கொள்கிறேன்

    ReplyDelete
  3. சூப்பர் ஐயா

    இது எல்லாம் பள்ளியில் நடக்கிறது


    இதுக்கு சட்டம் கொண்டு வாங்க


    ஆசிரியர்களின் சொந்த பணிகளை செய்ய கூடாது னால்

    நன்றி ஐயா

    By

    JAYAPRAKASH salem

    ReplyDelete
    Replies
    1. அப்டி என்ன நாயீ நடக்குது

      Delete
  4. கல்வி அமைச்சர் நல்ல விஷயம் பல கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்... சில அல்ல கை jayaprakash தொல்லை தாங்க முடியல

    ReplyDelete
    Replies
    1. யாரு அல்ல கை னு சொல்றீங்க உன்ன போல சூத்து கூட கழுவ தெரியாதவர்கள் அவர்கள் இல்லை

      அந்த மாணவர்களின் பிஞ்சு கைகளை வெச்சி வேலை வாங்கறீங்களே அவர்கள் தான் அல்ல கை

      நீயும் அதில் ஒருவர்

      JAYAPRAKASH

      Delete
    2. உன் அம்மா அப்டி தானே

      Delete
    3. ஒரு அம்மாவ பத்தி பேசரவன் செத்து போன பிணம் .

      அவன் இருந்தும் பிரோசனமற்றவன்.

      எங்க அம்மா வ பத்தி நினச்சினா செருப்படி தா

      Delete
  5. பள்ளிகளில் ஆசிரியர்கள் தங்கள் சொந்த வேலையை மாணவர்களிடம் வாங்கினால் தவறு தான் ஆனால் பள்ளித் தூய்மை செயல்பாடுகளில் மாணவர்களை பங்கேற்பதோ செய்வதோ தவறு என்றால் பின் எதற்காக NCC,NSS போன்ற மாணவர் சேவை அமைப்புகள் எதற்கு? பள்ளிப்பருவத்திலேயே மாணவர்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை வளரவில்லை என்றால் ?அவன் எப்படி இந்த நாட்டிற்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் சேவை செய்வான்... பள்ளி என்பது வெறும் பாட புத்தகம் மட்டும் அடங்கிய ஒரு செயல்பாடாக இருக்கக் கூடாது மாணவர்கள் தங்களுக்கும் தங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் சேவை செய்யக்கூடிய மனப்பான்மை வளர வேண்டும் இதுவே சரியான கல்வியாக இருக்கும்..

    ReplyDelete
    Replies
    1. உங்க சுய வேலைகளை செய்வதற்காக உங்க மகன் மகளை கொன்டு வந்து வேலை செய்யுங்க. முதலில் அவர்கள் நல்லா நாட்டிற்காக சேவை செய்யமட்டும்..

      NCC மாணவர்களுனா அதை சார்ந்த பணிகளை செய்யட்டும்.

      உங்கள் சுய வேலைகளை செய்வதற்காக பெற்றோர் பள்ளி க்கு அனுப்பக்

      JAYAPRAKASH SALEM

      Delete
    2. நீ ஒரு அல்ல கை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை

      Delete
    3. நீயே உன்மைய ஒத்துகிட்ட , நீ ஒரு அல்ல கை னு

      Delete
  6. Shabeer sir.. இந்த மாதிரி கூ முட்ட கிட்ட பேசுறது வேஸ்ட்

    ReplyDelete
    Replies
    1. திரு.ஜெயப்பிரகாஷ் எனது பிள்ளைகளை ஒரு அரசு பள்ளியில் தான் அதுவும் தமிழ் வழியில் தான் படிக்க வைத்துக் கொண்டு வருகிறேன் என்பது உங்களைப் போன்ற அறிவூஜீவிகளுக்கு தெரிய வாய்ப்பில்லை...குறிப்பு: நானும் எனது மனைவியும் அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள்...

      Delete
    2. ஆதான் தெரியுது...

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி