கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!!! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jan 18, 2023

கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்!!!

பள்ளித் தேர்வுகளில் குறைவான மதிப்பெண் எடுத்த 10, 11, 12ஆம் வகுப்ப மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு அரசு பழங்குடியினர் பள்ளிகளுக்கு பழங்குடியினர் நலத் துறை அறிவுறுத்தியிருக்கிறது.


தமிழகத்தில் உள்ள 320 பழங்குடியின உறைவிடப் பள்ளிகள் மற்றும் 8 ஏகலவ்ய மாதிரி உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள், கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு மோசமான மதிப்பெண் எடுத்தால், பள்ளி ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் எனறும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.


பொதுத் தேர்வுகளில், அரசுப் பள்ளி மாணவர்களைக் காட்டிலும், அரசுப் பழங்குடியினப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவாக இருப்பதாக பழங்குடியினர் நலத் துறைக்கு தரவுகள் கிடைக்கப்பெற்றிருப்பதை அடுத்து இந்த அறிவுறுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.


இந்த பள்ளிகளில் சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.


அந்த அறிவுறுத்தல் கடிதத்தில், கல்வியில் மோசமாக இருக்கும் மாணவர்கள் தனித்தனி குழுக்களாக மாற்றி அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தி, பொதுத் தேர்வில் அவர்கள் வெற்றி பெறுவதை உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வகுப்பு தொடர்பாக மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களும் மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நல்ல மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்குக் கற்பித்த ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.


அதுபோல 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள் எடுத்துரைக்க வேண்டும். தேவையான உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 comments:

 1. தேர்ச்சி விகிதம் ஆசிரியர் பெருத்த அமைவது மட்டுமல்ல மாணவர்களின் உடைய திறனை பொறுத்து அமையும் அதுவே ஆசிரியரும் தலைமை ஆசிரியரும் எந்த வகையிலும் பொறுப்பாக மாட்டார்கள் ஆசிரியரின் கற்பித்தலில் குறைபாடு இருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் மாணவர்களுடைய விருப்பமின்மை நாட்டமின்மை ஒழுக்கமின்மை ஆகியவற்றைப் பொறுத்து தேர்ச்சி சதவீதம் பெரும்பாலும் அமைகிறது. மேலும் உயர் நீதிமன்ற தீர்ப்பு ஒன்று மாணவரின் தேர்ச்சி விகிதத்திற்கு ஆசிரியர் எந்த வகையிலும் பொறுப்பாக்க மாட்டார் என ஏற்கனவே கூறியும் உள்ளது. அப்படி இருக்கையில் தேர்ச்சி சதவீதம் குறைவதற்கு ஆசிரியர் பொறுப்பு என்று அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவது மிகவும் வருந்தத்தக்கது. பாடம் கற்பிக்கும் ஒரு ஆசிரியர் நாளொன்றுக்கு 8 மணி நேரம் பள்ளியில் செயல்பட வேண்டும் அப்படி இருக்க அவர் மீது கற்பித்தல் பணியை தவிர்த்து ஏனைய பிற பணிகள் அதிகமாக சுமத்தப்படுகிறது அப்படி இருக்கும் பட்சத்தில் மாணவர்களை முழுமையாக கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம் இத்தனை காரணங்கள் இருக்கும் பொழுது ஆசிரியரும் மற்றும் தலைமை ஆசிரியர் மீது மட்டுமே குறை கூறுவது பைத்தியக்காரத்தனமாக உள்ளது. இது போன்ற செய்திகளை தயவு கூர்ந்து பதிவிட வேண்டாம்.

  ReplyDelete
  Replies
  1. அரசுப்பள்ளி ஆசிரியரின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்காத வரை இம்மாதிரியான கடுமையான சட்டங்களை அரசு விதித்துக்கொண்டே இருக்க வேண்டும்.

   Delete
  2. அரசு பள்ளி மாணவர்களின் ஓழுங்கினங்களை கண்டிக்கும் அதிகாரம் இல்லாமல் ஒவ்வொரு ஆசிரியரும் தினம் தினம் மன அழுத்தம் கொண்டு மனசாட்சி க்கு எதிராக பணிபுரியும் நிலைதான் உள்ளது..ஆண்ட ஆளும் அரசுகள் வருங்கால மனித வளத்தை சீர்குலைத்து அவர்களை ஓட்டு போடும் எந்திரங்களாக மாற்றிக்கொண்டு வருகின்றன... இந்த நிலையில் எந்த ஆசிரியர் நம்பிக்கைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பர்.

   Delete
  3. தம் பிள்ளைகளை என வாசிக்கவும்

   Delete
  4. ஆசிரியர் மாணவர் இடையே காலம் காலமாக இருந்து வந்த இரத்த உறவு இல்லாத ஒரு பந்தம் சமீபகாலமாக சிதைக்கப்பட்டு வருகிறது அன்னையை போல அன்பும் தந்தை போன்ற கண்டிப்பும் ஒருங்கே பெற்ற ஆசிரிய சமூகம் இன்று மாணவர்களிடையே அன்னியப்பட்டு நிற்கின்றது என்பதே உண்மை..... மக்கள் பலனையே கண்ணாக பார்க்கும் நமது தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் மாற்றத்தை நம்பிக்கையோடு எதிர்நோக்கும் ஆசிரியர் சமூகம்.....

   Delete
 2. 9th varailkum all pass, 10th la ellam pass, 11th 12th la evaluator eluthi eluthi pass . Naadu uruppudum... Verum pass percentage vechi enna da panna poringa..

  ReplyDelete
 3. yes. ஒருவேளை அதிக மதிப்பெண் பெற்றால். உயர் அலுவலர் டிஸ்மிஸ் அமைச்சர் ராஜினாமா.

  ReplyDelete
 4. படு கேவலமாக உள்ளது.... 9th வரைக்கும் all pass.... தேர்ச்சி குறைந்தால் ஆசிரியர் சஸ்பெண்ட்.... நீங்க எல்லாம் படிச்சிட்டு தான் வேலைக்கு வந்தீங்களா... இல்ல வேற ethuvuma

  ReplyDelete
  Replies
  1. மாணவர்கள் bit அடிப்பதை கண்டிடாதுங்க ஐயா.
   தேர்ச்சி சதவீதம் கூடுமே.
   நீ அங்க போனா,நான் இங்க போறேன்.
   அமைச்சர்கள குறை சொல்லாதீங்க.
   முட்டாள் அரசு அதிகாரிகள்...

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி