2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2023

2023 - 2024 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்!

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்கிறார். 


வரி குறைப்பு, வருமான வரி உச்சவரம்பு தளர்த்தப்படுமா என எதிர்பார்ப்பு.


அடுத்த பாராளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால், இதில் கவர்ச்சிகரமான அம்சங்களுக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.


பட்ஜெட்டில் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள்:


புதிய வரி விதிப்புகள் தவிர்க்கப்படலாம்.


மாதச்சம்பளதாரர்களுக்கு வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.2½ லட்சமாக இருப்பதை ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது. இது குறைந்தபட்சம் ரூ. 3 லட்சமாக உயர்த்தப்படலாம்


வருமான வரிச்சட்டம் பிரிவு 80-சியின்கீழ் வழங்கப்படுகிற வரி விலக்கு சலுகை ரூ.1½ லட்சத்தில் இருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தப்படக்கூடும். 


வருமான வரி விதிப்பு அடுக்கில் மாற்றம் வரலாம். 


மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் சலுகைகள் வழங்கப்படலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி