மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2023

மார்ச் 20ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல்..!

தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை மார்ச் 20ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.


தலைமைசெயலகத்தில், தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் பற்றி சபாநாயகர் அப்பாவு கூறியதாவது:-


சட்டப்பேரவையில் மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். 2023 -24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன். எத்தனை நாட்கள் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்பதை அலுவல் ஆய்வு குழு கூடி முடிவு செய்யப்படும்.


கவர்னர் உரையின் போது பேரவை மாடத்தில் அமர்ந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்த விவகாரம் குறித்து உரிமைக்குழு முடிவெடுக்கும். அதிமுக எதிர்க்கட்சித் துணை தலைவருக்கான இருக்கை விவகாரமானது ஏற்கனவே எடுத்த முடிவு தான் என்றார்.

1 comment:

  1. ஓய்யாரக் கொண்டையாம் அதில் தாழம்பூ என கலைஞர் சொன்னது நினைவுக்கு வருகிறது 😆😆😆

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி