தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2023

தமிழ்நாட்டில் 4,188 ஆசிரியர் பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!

நாட்டில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் காலியாக உள்ள 13,020 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தக்னிகி ஷிக்சா விதான் கவுன்சில் (TAKNIKI SHIKSHA VIDHAN COUNCIL) வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 4,188 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


மத்திய மனிதவள மேம்பாடு மற்றும் திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் இது செயல்பட்டு வருகிறது.ஆசிரியர் மற்றும் ஆசிரியர் சாராத பணிகள் என இரண்டு பிரிவுகளில்  இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.இதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் என்னென்ன என்பதை கீழே காணலாம். 


பணியிட விவரம்:


யோகா ஆசிரியர்- 349

கலை ஆசிரியர்- 349

இசை ஆசிரியர்- 349

இந்தி ஆசிரியர்- 349

தெலுங்கு ஆசிரியர்- 349

ஆங்கிலம் - 349

கணக்கு ஆசிரியர்- 349

பொது அறிவியல் ஆசிரியர்-349

சமூக அறிவியல் ஆசிரியர்- 349

நூலகர்- 349

தொழில்நுட்ப உதவியாளார்- 349

அலுவலக உதவியாளார்- 349

மொத்த பணியிடங்கள் -  4,188


கல்வித் தகுதி: 


யோகா, கலை, இந்தி, நூலகர், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், தெலுங்கு, ஆங்கிலம், இசை உள்ளிட்ட துறைகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது, பன்னிரெண்டாவது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.


அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து பட்டம் பெற்றிருக்க வேண்டும். மொழிப் பாடத்திற்கு விண்ணப்பிப்பவர்கள் மொழி பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.


தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கம்யூட்டர் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 


அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க பத்தாவது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 


இதற்கு விண்ணப்பிக்க பி.எட். அல்லது இளங்கலை பட்டம் இருக்க வேண்டும். பி.எட். முடித்திருந்தால் கூடுதல் சிறப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


வயது வரம்பு: 


இந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்னப்பிக்க 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். 


ஊதிய விவரம்: 


யோகா ஆசிரியர் - ரூ.32,000

கலை ஆசிரியர் - ரூ.32,000

இசை ஆசிரியர் - ரூ.32,000

இந்தி ஆசிரியர் -ரூ.35,000

தெலுங்கு ஆசிரியர் -ரூ.35,000

ஆங்கிலம் - ரூ.35,000

கணக்கு ஆசிரியர்- ரூ.35,000

பொது அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

சமூக அறிவியல் ஆசிரியர் -ரூ.35,000

நூலகர் - ரூ.30,000

தொழில்நுட்ப உதவியாளார் -ரூ.30,000

அலுவலக உதவியாளார் -ரூ.20,000


விண்ணப்பிப்பது எப்படி? 


https://www.tsvc.in/application.php - என்ற இணைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் விண்ணப்பிக்கலாம். 


விண்ணப்ப படிவத்திற்கான இணைப்பு - https://www.tsvc.in/online-application.php


விண்ணப்ப கட்டணம் : 


இதற்கு விண்ணப்பிக்க ரூ.500 விண்ணப்பிக்க கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.


கவனிக்க.. 


ஆண் விண்ணப்பதாரர்களில் தகுதியாவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாணவர்களுக்கான பள்ளிகளில் மட்டும் நியமிக்கப்படுவர். 


மகளிர் விண்ணப்பதாரர்கள் ஆண்,பெண் இருவரும் பயிலும் பள்ளிகளில் நியமிக்கப்படுவர். 


இதற்கு விண்ணப்பிக்க புதிய இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பழைய இணையத்தில் விண்ணப்பித்தால் அவை ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.


விண்ணப்பிக கடைசி தேதி: 25.02.2023


முக்கிய நாட்கள்:
5 comments:

  1. மாநில அரசில் காலிப்பணியிடங்களை எப்போது நிரப்ப போகிறீர்கள்.

    ReplyDelete
  2. The web site is a fake one, it is not connected to https://www.taknikishiksha.org.in/ which is the original website. Be aware. The account is some one from virudhachalam, Tamil nadu, IFSC Code HDFC0009162

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி