அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 18, 2023

அதிக எம்பிபிஎஸ் இடங்கள்: தேசிய அளவில் தமிழகம் முதலிடம்

நாட்டிலேயே இளநிலை மருத்துவப் படிப்பில் அதிக எம்பிபிஎஸ் இடங்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன.


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களைப் பொருத்தவரை கா்நாடகம் முதலிடத்தில் உள்ளது.


நாட்டிலுள்ள இளநிலை, முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 33 மாநிலங்களில் 655 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.


மொத்தம் 1,00,163 எம்பிபிஎஸ் இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதலிடத்தில் தமிழகம் உள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தம் 11,275 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.


அதற்கு அடுத்தபடியாக கா்நாடகத்தில் 10,955 இடங்களும், மகாராஷ்டிரத்தில் 10,295 இடங்களும், உத்தர பிரதேசத்தில் 9,203 இடங்களும் உள்ளன. அருணாசல பிரதேசம், மிஸோரம் ஆகிய மாநிலங்கள் தலா 50 இடங்களுடன் பட்டியலில் இறுதியாக உள்ளன.


முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக கா்நாடகத்தில் 6,006 இடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக மகாரஷ்டிரத்தில் 5,765 இடங்களும், தமிழகத்தில் 4,935 இடங்களும் உள்ளன.


நாடு முழுவதும் மொத்தம் 65,335 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. கடந்த 9 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 69 சதவீதமும், எம்பிபிஎஸ் இடங்கள் 95 சதவீதமும், முதுநிலை மருத்துவ இடங்கள் 110 சதவீதமும் உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி