அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2023

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!

மத்திய கல்வி அமைச்சக திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதலின்படி , ' Rani Laxmibai Atma Raksha Prashikshan ' ( Elementary and Secondary ) - Salf - Defense Training ) தலைப்பின் கீழ் , 6744 அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவியர்களுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு ரூ .15,000 ஆக மொத்த ரூ.1011.6 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் 5519 உயர் / மேல் நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு பயிற்சியளிக்க மாதம் ஒன்றுக்கு ரூ .5000 / - ( பயிற்சியாளர்களுக்கான ஊதியம் + மாணவர்களுக்கான சிற்றுண்டி செலவினம் ) பள்ளி வீதம் 3 மாதங்களுக்கு 15,000 ஆக மொத்தம் ரூ.827.85 / - இலட்சம் என அனுமதித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பள்ளி மாணவிகள் எந்த ஒரு சூழலையும் பக்குவமாக எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையிலும் , இடைநிற்றலை தவிர்த்து இடைநிலை மற்றும் மேல்நிலை கல்வியை தொடர்வதற்கு ஏற்ப Karate , Judo , Taekwondo , Silambam ஆகிய தற்காப்பு கலை பயிற்சிகள் மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது. இப்பயிற்சி மாணவிகளுக்கு தன்னம்பிக்கை தருவதால் , பாதுகாப்பிற்கு ஏற்புடையதாக அமைகின்றது.


கல்வி மாவட்டங்களில் தற்காப்புக்கலை பயிற்சி வழங்கப்பட வேண்டிய பள்ளிகளின் எண்ணிக்கை மாவட்ட வாரியாக கீழ்க்காணுமாறு வழங்கப்பட்டுள்ளது.

 SPD - Self Defence Training.pdf - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி