ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 2, 2023

ஓடும் இரயிலில் நிறைவேறிய பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை ; முதல்வரிடம் பரிந்துரைத்த கல்வி அமைச்சர்

பகுதிநேர ஆசிரியர்களின் பணிநிரந்தரம் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மனசு திட்டத்திக்கு மனு அனுப்பி இருந்தோம்.அதன் விளைவாக மாண்புமிகு கல்வி அமைச்சரின் அழைப்பின் பேரில் கடந்த டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி சென்று அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை தெரிவித்து வந்தோம்.


மீண்டும் அமைச்சர் அழைப்பின் பேரில் 1/2/2023 அன்று ஆசிரியர் மனசு திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சிகரம் சதீஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த 30 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம்.பணிநிரந்தரம்,ஊதிய உயர்வு,மே மாத ஊதியம்,தற்செயல் விடுப்பு,கருனைத் தொகை உள்ளிட்ட எங்களது கோரிக்கைகளை தெரிவித்தோம். அதை கனிவுடன் கேட்ட கல்வி அமைச்சர் உடனடியாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன் எனக் கூறினார்.


இது தொடர்பாக நாங்கள் அமைச்சரை சந்தித்த அன்றே வேலூருக்கு இரயிலில் பயணம் செய்த மாண்புமிகு முதல்வரிடம் நேரில் எங்களது கோரிக்கைகள் குறித்து தெரியப்படுத்தி உள்ளார்.
அதன் விளைவாக முதல்வர் அறிவித்து இத்தனை நாட்களாக நடைமுறைப்படுத்தப் படாமல் இருந்த எங்களது கோரிக்கைகளில் ஒன்றான பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்விற்கான தேதி நேற்று மாலையே அறிவிக்கப்பட்டது.மேலும் பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வு
விரைவில் முழுமைபெறும் என்னும் நம்பிக்கையையும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இந்நிகழ்வில் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பூர் பழ.கௌதமன்,திருச்சி சேசுராஜா, சேலம் ராமகேசவன்,திருப்பூர் யசோதா,கோவை ராஜாதேவகாந்த் மற்றும் கடலூர் செந்தில் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

14 comments:

  1. மகத்தான வெற்றி..

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஆமா விடிஞ்சு போச்சு 😄😄😄 போராட்டத்துல இருந்து எழுந்துருங்க... இன்னுமா நம்பறீங்க 🤔🤔

      Delete
  2. ஈரோடுல கவுத்து பாருங்க... பார்லிமென்ட் க்குள்ள பெர்மனெண்ட் ஆவிங்க.... ஒரே வழி 😄😄😄

    ReplyDelete
  3. சட்ட சபையில் அறிந்த அறிவிப்பு. ஓடும் ரயிலில் விடியலை நோக்கி வெற்றி. அடுத்த ரயில் பயணத்தில் பணி நிரந்தரமாக..?

    ReplyDelete
    Replies
    1. TRB Exam இல்லாம, எந்த teacher job um Appoint Panna mudiyadhu, That's rules

      Delete
  4. இந்த வெற்றியை வரலாற்று புத்தகத்தில் எழுதியே ஆக வேண்டும்.15 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி.எங்களது கனவை, ஆசையை, கோரிக்கையை உடணடியாக நிறைவேற்றிய முதல்வருக்கு கோடான கோடி நன்றிகள்

    ReplyDelete
  5. தஞ்சாவூர் கல்வெட்டு ல எழுதி வச்சிட்டு அங்கேயே ஒக்காந்துக உனக்கு பின்னாடி வரவங்க படிச்சி நடந்துகுவாங்க....

    ReplyDelete
  6. இன்னுமா இவங்க நம்மள நம்புறாங்க.. 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️ஸ்டாலின் mind வாய்ஸ்

    ReplyDelete
  7. Silptest questions

    https://tamilmoozi.blogspot.com/2023/02/1-2023pdf.html

    ReplyDelete
  8. நீங்க பகுதிநேர ஆசிரியர் பணிக்கு மட்டும்தான் தேர்வு செய்யபட்டு உள்ளீர்கள். நிரந்தரம் என்ற வார்த்தைக்கு இடம் கிடையாது. நிரந்தரமாக அரசுபள்ளி ஆசிரியராக பணி புரிய விரும்பினால், அனைத்து பகுதி நேர ஆசிரியர்களும் Resign செய்யுங்கள்.

    ReplyDelete
  9. All teaching post job tet or special teachers exam nu vanthachu no chance for permanent job

    ReplyDelete
  10. போகடா நீங்களும் உங்க ஆட்சியும்

    ReplyDelete
    Replies
    1. பேய்க்கு பயந்து பிசாசுக்கு வாக்கப்பட்ட கதை

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி