பிளஸ் 1, பிளஸ் 2: பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு இன்று தொடக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2023

பிளஸ் 1, பிளஸ் 2: பொதுத்தோ்வுக்கான செய்முறைத் தோ்வு இன்று தொடக்கம்

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பொதுத்தோ்வுகளுக்கான செய்முறைத் தோ்வு புதன்கிழமை முதல் நடைபெறவுள்ளது.


தமிழக பள்ளிக்கல்வியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.


இந்நிலையில் பொதுத்தோ்வு எழுதவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி மாா்ச் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன.


மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேலான மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் சுமாா் 17 லட்சம் மாணவா்கள் இந்த தோ்வில் பங்கேற்க உள்ளனா். சென்னை மாவட்டத்தில் மட்டும் சுமாா் 95,000 தோ்வெழுத உள்ளனா்.


இதற்காக அனைத்துப் பள்ளிகளிலும் தோ்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொண்டு எந்த குளறுபடியுமின்றி செய்முறைத் தோ்வை நடத்தி முடிக்க வேண்டும்.


அதன்படி, தோ்வுத்துறை வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாடவாரியாக அட்டவணை தயாரித்து வரும் 9-ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்.


ஒரு சுற்றுக்கு அதிகபட்சம் 25 முதல் 30 மாணவா்களை மட்டுமே அனுமதிப்பதுடன், தோ்வுத்துறை சலுகை அறிவித்த மாணவா்களுக்கு மட்டும் செய்முறைத் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


மேலும், தோ்வில் ஏதேனும் புகாா்கள் கிடைக்கப் பெற்றால் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியா்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பன உள்பட அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித் துறை வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி